ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐ.நா பொதுச் செயலாளரை இன்று சந்தித்தார்.

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார். இதன் போது 1978இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார். … Read more

கட்டம், கட்டமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும்

அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிதிக் கொள்கையின் அடிப்படையில் கட்டம், கட்டமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைவடைவதால் மாத்திரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்கமுடியும் என்று தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதத்தில் 69.8 வீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 66 வீதமாக காணப்படுகிறது. இதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை உடனடியாக குறைவடையுமென குறிப்பிடமுடியாது. எவ்வாறெனினும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நிதிக்கொள்கையின் பிரகாரம், படிப்படியாக அத்தியாவசியப் … Read more

 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த இலங்கை செயற்குழு

ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022 அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது. 1.      இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதுமான நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரப் பரிமாற்றத்தின் அடிப்படையில், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உரிய நடவடிக்கை மற்றும் சட்ட முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்துள்ளது. 2.      தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்காக, நெருக்கடியின் பாதகமான தாக்கத்தைத் தணித்து, நாட்டை நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு இட்டுச் செல்லும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின. 3.     ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும், பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியது. இச்சூழலில், அதிகாரங்கள், கண்காணிப்புக்கள் மற்றும் சமநிலைகளை பிரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின. தேர்தல் சீர்திருத்த செயன்முறை குறித்தும் பணிக்குழுவிற்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2019 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் பணியின் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது. ஜனநாயகக் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமைதியான முறையில் ஒன்றுகூதுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. 4.     ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திலான முன்னேற்றத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், நீதிக்கான அணுகலை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்தவுள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டியது. 5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவதற்காக மார்ச் 2022 இல் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்ததோடு, அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை உறுதியளித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவிப்பது குறித்த இலங்கையின் புதிய தகவல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்படாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, 2023ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு விரிவான சட்ட முன்மொழிவைத் தயாரிப்பதில் இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. 6.     இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 7.   இரு தரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள், சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உட்பட தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், இது தொடர்பான தனி உறுப்பினர் மசோதா குறித்தும் குறிப்பிட்டது. 8.      ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒப்பந்த அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபடுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது. நிலையான அபிவிரு;ததிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கட்டமைப்பில் தமது ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 9.  ஜ.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறை மற்றும் அதன் தேவைகள் குறித்து செயற்குழுவுக்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜ.எஸ்.பி. + உறுதிமொழியில் இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. வருணி முத்துக்குமாரண மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசிய பிரிவின் பிரதிப் பணிப்பாளரும், தலைவருமான திருமதி. ரென்ஸ்ஜே டீரிங்க் ஆனகியோர் இச்செயற்குழுக்கான இணைத்தலைமையை வகித்தனர்.  Public Diplomacy Division Ministry of Foreign Affairs   1.      இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதுமான நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரப் பரிமாற்றத்தின் அடிப்படையில், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உரிய நடவடிக்கை மற்றும் சட்ட முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்துள்ளது. 2.      தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்காக, நெருக்கடியின் பாதகமான தாக்கத்தைத் தணித்து, நாட்டை நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு இட்டுச் செல்லும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின. 3.     ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும், பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியது. இச்சூழலில், அதிகாரங்கள், கண்காணிப்புக்கள் மற்றும் சமநிலைகளை பிரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின. தேர்தல் சீர்திருத்த செயன்முறை குறித்தும் பணிக்குழுவிற்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2019 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் பணியின் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது. ஜனநாயகக் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமைதியான முறையில் ஒன்றுகூதுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. 4.     ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திலான முன்னேற்றத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், நீதிக்கான அணுகலை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்தவுள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டியது. 5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவதற்காக மார்ச் 2022 இல் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்ததோடு, அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை உறுதியளித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவிப்பது குறித்த இலங்கையின் புதிய தகவல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்படாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, 2023ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு விரிவான சட்ட முன்மொழிவைத் தயாரிப்பதில் இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. 6.     இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 7.   இரு தரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள், சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உட்பட தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், இது தொடர்பான தனி உறுப்பினர் மசோதா குறித்தும் குறிப்பிட்டது. 8.      ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒப்பந்த அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபடுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது. நிலையான அபிவிரு;ததிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கட்டமைப்பில் தமது ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 9.  ஜ.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறை மற்றும் அதன் தேவைகள் குறித்து செயற்குழுவுக்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜ.எஸ்.பி. + உறுதிமொழியில் இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. வருணி முத்துக்குமாரண மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசிய பிரிவின் பிரதிப் பணிப்பாளரும், தலைவருமான திருமதி. ரென்ஸ்ஜே டீரிங்க் ஆனகியோர் இச்செயற்குழுக்கான இணைத்தலைமையை வகித்தனர்.  Public Diplomacy Division Ministry of Foreign Affairs

தமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு ,மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

வலி வடக்கு, மயிலிட்டிப் பிரதேசத்தினை சேர்ந்த மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர். மயிலிட்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருக்க விரும்புகின்ற தரப்புக்களை நம்பி ஏமாறாமல், பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வழிவகைகளில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தை … Read more

தென் கொரிய உயர்ஸ்தானிகர்  உடத்தலவின்னவுக்கு விஜயம்

இலங்கைக்கான தென் கொரிய உயர்ஸ்தானிகர் சென்தூஸ் வூன்ஜின் ஜெஒன்ங் விஜயம் உடத்தலவின்னவுக்கு விஜயம் செய்துள்ளார். தென்கொரியாவில் கடந்த மாதம் 29 அம் திகதி இடம்பெற்ற சன நெருசல் சம்பத்தில்  உயிரிழந்த உடத்தலவின்ன வாலிபரின் இல்லத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக உயர்ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தென் கொரிய நெருசல் சம்பவத்தில் உயிரிழந்த 160 பேர்களில் இலங்கையைச் சேர்ந்த கண்டி மாவட்டத்தின் உடத்தலவின்ன  27 வயதுடைய முஹமட் ஜினத் எனபவர் உயிரிழந்தார். துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினரின் இல்லத்திற்கு விஜயம் செய்த … Read more

இலங்கையில் குரங்கம்மை: நோயாளி குணமடைந்து வருகிறார்

குரங்கம்மை அல்லது மங்கிபொக்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர் குணமடைந்து வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் அடையாளங்காணப்பட்ட முதலாவது குரங்கம்மை நோயாளர் குறித்து சுகாதார பிரிவு தெரிவிக்கையில் ,குரங்கம்மை நோய் குறித்து பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் கடந்த மே மாதம் தொடக்கம் இந்த நோய் பரவிய போதிலும் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் … Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்படடுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் அணி இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகவை இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் … Read more

வடக்கிற்கான ரயில் சேவைகள் இரத்து

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி யாழ்தேவி இன்று (05) மதியம் வவுனியா மதவாச்சிக்கு அருகில் புனேவ என்ற இடத்தில் தடம்புரண்டுள்ளது. என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் இவ்வாறு தடம்புரண்டுள்ளன. ரயில் சேவைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதையின் ஊடான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இந்த ரயில் பாதையில் இன்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த சில … Read more

உக்ரைனி,ல் ,போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு

உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையாளர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்தார்.  ஐ.நா. கூட்டத்தில் பிலிப்போ கிராண்டி தெரிவிக்கையில், ‘உக்ரைன் போர் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 14 மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய படையெடுப்பிற்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இடம்பெயர்வு நடப்பது இதுவே … Read more