2048 இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் பயணத்திற்கு இளைஞர்களின் முழுமையான பங்களிப்பை பெறுவோம் – ஜனாதிபதி

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும் எனவும், அதற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். “2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பயணத்தில் இளைஞர்களுக்கான மேடை ” எனும் தலைப்பில் இளைஞர்களுடன் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கடந்த (22ஆம் திகதி) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய இளைஞர்கள் எதிர்நோக்கும் … Read more

ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது! – சம்பந்தன் அதிரடி

தமிழர்களின் வாழ்வில் அமைதி ஏற்பட்டு மக்கள் முன்னேற்றகரமாக வாழக்கூடிய வகையில் இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென இன்றைய நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இறைவனை வேண்டுகின்றோம் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “அனைவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி தமிழ் மக்களுக்கு முக்கிய பண்டிகை … Read more

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ,ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது. முதல் சுற்றில் பெற்ற 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள நெதர்லாந்து அணி, சூப்பர்12 சுற்றிலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் … Read more

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுவாக்க இந்தியா திடசங்கற்பம்

இலங்கை  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னக்கோன் அவர்கள் தலைமையில் கடற்படை மற்றும் இராணுவத்தைச்சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட மூவரடங்கிய பேராளர்கள், இரு வருடங்களுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் உலக பாதுகாப்பு கண்காட்சியான  DefExpo 2022ல் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இக்கண்காட்சியானது குஜராத்தில் உள்ள காந்திநகரில் 2022 ஒக்டோபர் 19ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி … Read more

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியால் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். .21.10.2022 முதல் அமுலுக்குவரும் வகையில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .21.10.2022 முதல் அமுலுக்குவரும் வகையில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ,நாளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளுகின்றது

உலகக் கிண்ண T-20 போட்டித் தொடரில், இலங்கை அணி நாளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளுகின்றது. 2022 உலகக் கிண்ண T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி எதிர்கொள்ளும் இரண்டாவது போட்டி இதுவாகும். இதேவேளை ,இலங்கை அணி அயர்லாந்து அணியைநேற்று (23)  9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் ,நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 … Read more

பாக்கிஸ்தான் அணி,இந்திய அணியிடம் அதிர்ச்சி தோல்வி

உலகக் கிண்ண T-20 போட்டித் தொடரின் நேற்று (23) நடைபெற்ற போட்டியில் ,பாக்கிஸ்தான் அணி,இந்திய அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.  இந்த போட்டியில் இந்திய அணிவீரர் விராட் கோலி 82 ஓட்டங்களுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார். இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அணியை  வீழ்த்தி இந்திய அணி  வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில் பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் பாக்கிஸ்தான் … Read more