தொழில் தேடும் இளைஞர்களுக்கு ,இணையவழி வர்த்தகம் (இ-பிசினஸ்) தொடர்பான விழிப்புணர்வு

பதுளை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றம், ஊவா மாகாண சபை, எல்ல இளைஞர் கழக பிராந்திய சபை மற்றும் பதுளை இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இணையவழி வர்த்தகம் (இ-பிசினஸ்) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (18) எல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பதுளை மாவட்ட இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் எல்ல பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இணையவழி தொழில் வாய்ப்புகள் இருப்பதை தெளிவுப்படுத்துவதே இந் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும். … Read more

24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் : வைத்தியரை நாட வேண்டும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் பெருமளவில் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார். இந்த வருடத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 61,391. இதுதொடர்பாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் அமர வீர மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது பருவ பெயர்ச்சி காலநிலையுடனான … Read more

அரசாங்கம் மக்களுக்கு பொய் கூறுகின்றது – சுமந்திரன் எம்.பி ஆதங்கம்

மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆட்சியாளர்கள் பாசாங்கு செய்கின்றார்கள் அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் பின்னர் அரசியலமைப்பின் கறை படிந்ததாக அவர் கூறினார். அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் ஒரு மோசடி என்றும் நிறைவேற்று … Read more

நாடாளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வு: ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்தல் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். எமது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் … Read more

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி ((Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புகளை மீண்டும் செயற்படுத்தி தற்போதைய மெதுவான செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க … Read more

தொழில்முனைவர்களுக்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு புதிய கொள்கைக் கட்டமைப்பு

இந்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களுக்குத் தற்பொழுது காணப்படும் தடைகளை நீக்கி புதிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யமாறு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் (19), மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலவுக்குப் பணிப்புரை வழங்கினார். பாடசாலை கல்வியிலிருந்தே தொழில்முனைவு … Read more

இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கான அதிகாரம்

அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு செய்வதற்குத் தீர்மானித்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கான அதிகாரம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றுக்கு வழங்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக சேவைகள் சங்கம் பரிந்துரை  • குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது   அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்குத் … Read more

மேல் மாகாண மக்களுக்கு அவசர அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். வழங்கப்பட்ட தரவுகளின்படி 61,391 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் … Read more

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, ஆப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். ஆப்பிள் விதைகளை இந்நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு … Read more