கோது மாவின் விலை மீண்டும் குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.    விலை குறைப்பு இதன்படி,  கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.   Source link

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரின் சுகயீன விடுமுறை முடிவு

சுகயீன விடுமுறையுடன் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் நேற்று (19) முதல் வழமை போன்று தமது பணிகளில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய உற்பத்தி தொடர்பான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையில் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொலன்னாவ, முத்துராஜவெல முனையங்கள் மற்றும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் இருந்து எரிபொருட்களை விநியோகிக்கும்; பணி (18) தடைப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. … Read more

  எரிபொருளின் தரம் குறித்து ஆய்வுகள்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) , நுகர்வோர் அதிகாரசபை மற்றும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைகளுக்குட்படுத்த உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விநியோகிக்கும் எரிபொருள்களின் தரம் குறித்து … Read more

இன்றும் நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்20ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றும் நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்குமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்வடமேல்மாகாணங்களிலும் காலி … Read more

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ஜனாதிபதி தெரிவிப்பு. • கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு 700 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.• கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது.• நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரியில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம். கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார … Read more

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார … Read more

மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் இறுதிக்கிரியையினை முழுமையான அரச மரியாதையுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.

மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் இறுதிக் கிரியையை பூரண அரச மரியாதையுடன் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். அப்பணிகளை முன்னெடுப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கை பௌத்த தேரர்களிடையே முக்கியமான ஒருவரான மறைந்த தேரர், தனது துறவி வாழ்வை அர்த்தபுஷ்டியாக செலவிட்டுள்ளார்.அன்னார் வடமத்திய மக்களுக்கு மட்டுமன்றி இந்நாட்டில் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜபக்சவுடன் தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. Source link

ஒரு மாதத்திற்கு மேலாக காணாமல் போன மாலுமிகள் தாயகம் திரும்புகின்றனர்

ஒரு மாதத்திற்கும் மேலாக திசை மாறி சென்ற இலங்கை கடற்படையின் ஆறு மாலுமிகள் இன்று (19) அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் இன்று காலை பாதுகாப்பாக நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தளபதி இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் (செப்டம்பர் 17) கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட கடற்படையினரின் கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் காரணமாக தெற்கு கடற்கரையிலிருந்து, தென்கிழக்கே 400 கடல் மைல் தொலைவில் சென்று … Read more

உலக உணவுத்திட்டத்தின் கீழ், 4,000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

வலப்பனை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலப்பட தெரிவித்தார். உலக உணவு உலக உணவுத்திட்டத்தின் உறுப்பினர் ஹெச்.பி. சோமதிலக தலைமையில் நேற்று (18) நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் இதனை கூறினார். வழங்கப்பட்ட பொருட்களின் அளவுகளுக்கமைய வலப்பனை பிரதேச செயலக பிரதேசத்தில் குறைந்த … Read more