200க்கும் மேற்பட்டோர் தலைமறைவு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 404 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையும் அவர்களில் 200க்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குழுவினர் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் … Read more

கண்டி மாவட்டத்தில் 14,476 ஹெக்டேயர் வயல் நிலத்திற்கு கரிம உரம்

கண்டி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 476 ஹெக்டேயர் வயல் நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு எதிர்வரும் பருவத்திற்கான கரிம உரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் கண்டி மாவட்ட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. கரிம உரங்களை உற்பத்தி செய்யும் எட்டு கம்பனிகள் இம்மாவட்டத்திற்கு உரங்களை வழங்குவதாக அலுவலகத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் W.M.W.G. ஆனந்த தெரிவித்தார். மேலும், கரிம உரங்கள், கரிம திரவ உரங்கள் மற்றும் ஏனைய உரங்கள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாதிரிகள் விவசாய துறையினரின் … Read more

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜன்சிகள்!

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வதற்கு பலர் தயாராக இருப்பதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி மோசடியாகப் பணம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொடர்பாக பல தகவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குக் கிடைத்துள்ளது. யாரேனும் நபருக்கு அல்லது ஏஜன்சி நிறுவனத்திற்கு வெளிநாடு செல்வதற்காகக் கடவுச் சீட்டை அல்லது பணத்தை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் றறற.ளடகடிகந.டம என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து அல்லது 1989என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு … Read more

பௌர்ணமி தினத்தன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்ட நாய்கள்! பொலிஸார் விசாரணை

மாத்தளை – கலேவெல, பட்டிவெல பிரதேசத்தில் நேற்று பௌர்ணமி தினத்தன்று (09) அதிகளவான நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் பல கருத்தரித்த பெண் நாய்களும், குட்டிகளுக்கு உணவளிக்கும் நாய்களும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். Source … Read more

நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகள்

நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகள் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று, நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளையாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் தெரிவித்துள்ளார். இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், … Read more

காலி மீன்பிடித் துறைமுக குறைபாடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்பான கலந்துரையாடல்

காலி மீன்பிடித் துறைமுகத்தில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள  ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள அமோனியா வெளியேற்றம் உட்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் ஐஸ் தொழிற்சாலையை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (10) இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், ஐஸ் தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுடனான சந்திப்பின் பின் கூட்டமைப்பினருடன் முக்கிய சந்திப்பில் எரிக்

ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என கூறப்படுகிறது. ஜனாதிபதியின் அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் … Read more

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும்  22, 23 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணிவரை கைதடி வட மாகாணசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. 1. வாசித்தலில், எழுதுதலில், விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப்      பரீட்சையும் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும்.2. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல்.3. தனிப்பட்ட மோட்டார் … Read more

தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்தக் கடிதத்தை கடந்த 06 ஆம் திகதி கையளித்தார். தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணைக்கு அமைய இதுவரை உரிய 35 அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 28 பேரின் … Read more

22வது திருத்தச் சட்டமூலத்தை, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஆய்வு

அரசியலமைப்புக்கான 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கக் (GESI) கண்ணோட்டத்தில் கலந்துரையாடலொன்றை  அண்மையில் (06) பாராளுமன்றத்தில் நடத்தியது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் நடந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. சட்டமூலத்தின் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டும் அதேவேளை, அரசியலமைப்புப் பேரவையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஒதுக்கீடும் (ஒதுக்கப்பட்ட அல்லது ஏனைய … Read more