வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான தேவை அதிகரிப்பு

இந்த வருடத்திற்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை எட்டியுள்ளது. இந்த வருடத்தில் மூன்று இலட்சம் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவது இலக்காகும். இதன் அடிப்படையில் இத்தொகையை மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ ரி எம் இயந்திரம்: பணம் எடுக்கும் போது ….

தன்னியக்க டெலர் இயந்திர (ATM) அறைக்கருகாமையில் இருந்து பல நபர்களை ஏமாற்றி அவர்களின் ATM ஏரிஎம் அட்டையை தந்திரமாக திருடி , ஐம்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய நபரை கடுவலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபரை கைது செய்த போது பலரின் எட்டு வங்கிகளின் ஏரிஎம் அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றினர். சந்தேக நபர் கடுவலைப் பகுதியிலுள்ள அரச வங்கியொன்றிற்கு அருகிலிருந்து சுமார் 40 தடவைகளில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இருபது இலட்சம் ரூபாவை மோசடி … Read more

இந்தியாவில், இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை இந்திய சுகாதார அமைச்சு இன்று (12) காலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 76 ஐ விட அதிகமாகும். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 580 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா … Read more

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முன்னிலையில் இன்று (12) முற்பகல் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD)2022-09-12

தெமட்டகொட மாடி வீட்டு கட்டிட தொகுதி பொலிசாரினால் திடீர் முற்றுகை

தெமட்டகொட மாடி வீட்டு கட்டிட கட்டிட தொகுதியில் பொலிஸார் மேற்கொண்ட  தீடிர் முற்றுகையில் ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முற்றுகையின் போது 35 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 100 போதை குளுசைகள், 5 வாள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 க்கும் 44 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வாழைத்தோட்டம் மற்றும் மாளிகாவத்தை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெமட்டகொட … Read more

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2022 ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நல்வாழ்த்துக்;களைத் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சாதனை மிக்க வெற்றியைப் பெற்று எமது கிரிக்கெட் அணி மீண்டுமொரு தடவை இலங்கையின் புகழை சர்வதேசத்தில் மேலும் உயர்த்தியுள்ளது. இந்த அனைத்து வெற்றிகளுக்கும் தலைமைத்துவம், அணியின் சகல வீரர்களின் ஒற்றுமை மற்றும் வரையறையற்ற அர்;ப்பணிப்பு என்பன பெரும் பங்காற்றியுள்ளன. அதற்காக அர்ப்பணித்த பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் … Read more

கொழும்பு, யாழில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை! தங்க நகை வாங்கவுள்ளோருக்கான தகவல்

கொழும்பில் தங்க விலை நிலவரம் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் முன்னர் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 40 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையான விலை வரம்பிற்குள் இருந்தது. இரண்டு இலட்சத்தை தொட்ட தங்க விலை எனினும் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் … Read more

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை ,14 மணிநேர நீர் விநியோகத்தடை

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை ,14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள  கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி (13.09.2022) மு.ப. 6 மணி முதல் பி.ப. 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என சபை அறிவித்துள்ளது. ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட … Read more