கொழும்பு றோயல் கல்லூரி பகுதியில் தீ விபத்து (Video)

கொழும்பு றோயல் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் தீ விபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. றோயல் கல்லூரி மாணவர் திறன் அபிவிருத்தி நிலையப்பகுதியிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்கான காரணம் விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளிவரவில்லை. தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயிளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.     Source link

பிரித்தானிய மகா ராணியின் மறைவு: முன்னாள் ஜனாதிபதியின் இரங்கல் செய்தி

பிரித்தானிய மகா ராணியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் “பொதுநலவாய நாடுகளின் தலைவரும், பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு ராஜரீதியிலான வரவேற்பு அளித்ததற்காக நான் எப்பொழுதும் அவருக்கு மிகவும் … Read more

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சில படிவங்கள் காலத்துக்குப் பொருந்தாமல் இருப்பதனால் அவற்றை தற்போதைய தேவைக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க … Read more

அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்து கொண்டார். இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை … Read more

இராஜாங்க அமைச்சுக்களின் மேலதிக செலவுகளைக் குறைக்க பணிப்புரை

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நேற்று (09) பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (8) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் … Read more

இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடோ-செயலாளர்களோ கிடையாது: ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (09) பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (8) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அதன்படி, … Read more

மகாராணியின் மறைவை முன்னிட்டு பல நாடுகளில் நாணய தாள்களில் மாற்றம்

2 ஆவது மகாராணியின்   மறைவின் காரணமாக அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் வெளியிடப்படும் நாணய தாள்கள் மற்றும் நாணய குற்றிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக மகாராணியின் உருவப்படத்தை நீக்கி புதிய மன்னராக நியமிக்கப்படவுள்ள நார்ல்ஸ் மன்னரின் உருவப்படம் உள்ளவாங்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்கு பின்னர் அச்சிடப்படும் நாணய தாள்களுக்கு இது செல்லுபடியாகும். பல நாடுகளில் மற்றும் பல இடங்களில் கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2வது … Read more

சுவாமி விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இன்று (09) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது இவ்வறிக்கையை கல்வி அமைச்சின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அலோசனைக் குழுவிற்கு முன்வைக்குமாறு கல்வி அமைச்சர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியை நவீனமயப்படுத்த ஆலோசனை

பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியில் வர்த்தக கூடங்களை வர்த்தகத்திற்கு பொருத்தமான வகையில் வசதிகளை கொண்டதாக குறுகிய காலத்திற்குள் நவீனமாயப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஸ் ஹேரத் அதிகார சபையின் திட்டப்பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை குறைந்த செலவில் மேற்கொள்ளுமாறு அதிகார சபையின் தலைவர் இதன்போது அறிவுறுத்தினார். பேலியகொடை மெனிங் வர்த்தக கட்டிட தொகுதியை பார்வையிட்டதுடன் வர்த்தகர்களுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கலந்துரையாடினார். இதன்போது வர்த்தக கூடங்கள் சிறியதாக இருப்பதனால் தமது வர்த்தக … Read more