வடமேல் கிழக்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூலை 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா … Read more

இந்த மாதம் 27 கோவிட் மரணங்கள் பதிவு

இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு பதிவாகி வருவதாகவும், பதிவாகா நோய்த் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கக் கூடும் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பிரதானி வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். நோய்த் … Read more

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் – அசேல தர்மசிறி

போரினால் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து அதனை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய போர்வீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தின் தியாகிகளை நினைவு கூரும் தினத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக ஒரு தந்தையும் தமிழ் இளைஞர்கள் குழுவும் காலி முகத்திடலில் நிகழ்வை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் பிரபாகரனுடன் இணைந்து போராடிய தந்தைகள் போராட்ட களத்தில் காணப்பட்டதாகவும் … Read more

அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு கௌரவ திஸ்ஸ விதாரண வாக்கைப் பதிவு செய்யவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண நேற்று (27) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வாக்கைப் பதிவுசெய்தில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பாக பாராளுமன்ற இலத்திரனியல் வாக்கெடுப்புப் பதிவுகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் … Read more

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

நேற்று (29) நள்ளிரவு  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள .ந்த வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதோடுஇ 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் … Read more

அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

மக்கள் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டின் இளைஞர்கள், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், தற்போது மக்கள் போராட்டத்தின் பின்னணியில் பல்வேறு இருண்ட சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற அவசரகால நிலை  பிரகடனம்  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றிய  அமைச்சர் பிரேம ஜயந்த 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பொது நிதியில் கட்டப்பட்ட சொத்துக்கள் இவை என … Read more

பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார ,பேராசிரியர் ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்…

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார மற்றும் திருமதி ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (ஊடகம்) மற்றும் பேராசிரியர் ஷெனுகா செனவிரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் (சர்வதேச ஊடகம்) அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றனர். களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார அவர்கள், அந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான … Read more