வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

எளிமையான முறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று (2022 ஜூலை 25) அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இதுவரை வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக, பதவியிலிருந்து வெளியேறுகின்ற … Read more

கடன் அட்டை வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதன் மூலம் கடன் அட்டைக்கான வருடாந்த வட்டி விகிதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபையானது,கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட உச்ச வட்டி விகிதத்தை நீக்க தீர்மானித்ததை தொடர்ந்து ,வட்டி விகிதங்கள் 18 வீதத்தில்லிருந்து 24 வீதமாகவும் , அதனை தொடர்ந்து 30 வீதமாகவும் , … Read more

இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த … Read more

பெரும் பொருளாதார நெருக்கடி – சீனாவிடம் உதவி கேட்கும் இலங்கை

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கு உதவுவதற்காக அவசரகால உதவியாக 4 பில்லியன் டொலர் நிதி பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா ஒரு திறவுகோல் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 வீதம் சீனாவிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார். 22 மில்லியன் மக்களைக் … Read more

பேருந்தில் பயணித்த நபர் துப்பாக்கி , தோட்டாக்களுடன் கைது

பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  (24) அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரவலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வீதியில் சென்றவர்களுக்கும், பேருந்தில் மரண சடங்கில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த நபர்களுக்கும் இடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் … Read more

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்! புலிகள் உங்களை விட சிறந்தவர்கள் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை கைப்பற்றி பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டகாரர்கள், இராணுவத்தினரை பார்த்து இதனை  கூறியுள்ளனர். போர் குற்றங்களுக்கு இன்னும் பதில் இல்லை  இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர்  குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் இல்லை எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் ஊடாக இராணுவத்தின் போர் குற்றம் உறுதியாகி இருப்பதாகவும் … Read more

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் வலியுறுத்தல்…

நீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்சி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஜனாதிபதி அவர்களின் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு பேரழிவை … Read more

இன்று முதல் QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (25) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் (Fuel pass) பிரகாரம் எரிபொருள் வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதற்காக 4,708 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த முறைக்கு அமைய QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். … Read more