இலங்கை
நிலவுகின்ற அதிவிசேட பேரண்டப் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கான சலுகைகள்
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலுடன் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுமுகமாக 2020 மாச்சு தொடக்கம் இலங்கை மத்திய வங்கி பல சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டஇசைவு தாமதகாலம், கடன் மறுசீரமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல், கடன் அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துதல், குறைந்த செலவில் மூலதனக் கடன்கள், சில வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்காக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை இச்சலுகைகள் உள்ளடக்குகின்றன. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அத்துடன் சுற்றுலாத் துறை, போக்குவரத்து, தயாரித்தல், சேவைகள், … Read more
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எரிபொருள் விநியோக நடைமுறை
கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களினூடாக இன்று (21) முதல் முன்னோடித் திட்டமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் (Fuel pass) பிரகாரம் எரிபொருள் வழங்கப்பட உள்ளன. இந்த முறை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக இன்று (21) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் கொழும்பில் உள்ள பின்வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும் R.N.D.A. Senevirathna – Colombo 04 · C.F.DE … Read more
மீண்டும் ராஜபக்சர்களின் நிர்வாகத்திற்குள் நாட்டை கொண்டு வர முயற்சி! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரணில் ஆட்சியில் இருக்கும் வரை மீண்டும் அனைவரும் ஒன்றுகூடி போராட்டத்தை ஆரம்பித்து அவரை வெளியேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைபோய் தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளதுடன், மீண்டும் ராஜபக்சர்களின் நிர்வாகத்திற்குள் நாட்டை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மே்றகொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் … Read more
நிமல் சிறிபால டி சில்வா இலஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு! ஜப்பானிய நிறுவனம் மறுப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விஸ்தரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிறுவனத்திடம், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலஞ்சம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, ஜப்பானிய நிறுவனம் மறுத்துள்ளது. நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுமத்திய குற்றச்சாட்டில் ஆதாரமற்றது என ஜப்பானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 570 மில்லியன் டொலர் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன், கட்டுநாயக்க விமான நிலைய நிர்மாணப் பணிகள் தொடர்பான … Read more
போலி எரிபொருள் இணை தள அனுமதி பத்திரத்திங்கள் குறித்து பொது மக்களுக்கு அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதி (QR குறியீடு) பத்திரத்தை உத்தியோகபூர்வ அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (National Fuel Pass) http://fuelpass.gov.lk மூலம் மட்டுமே பெற முடியும் என்பதை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) பொதுமக்களுக்கு தயடன் தெரிவித்துக்கொள்கிறது. இதேவேளை தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுளள அங்கீகரிக்கப்படாத இணை தளங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு முன் அழைத்த மர்ம நபர்! வெடித்தது சர்ச்சை – அரசியல் ஆய்வாளர் (VIDEO)
இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் போது இந்தியாவின் பெயர் சொல்லக்கூடிய உயர் அதிகாரியொருவர் அழைப்பினை ஏற்படுத்தி ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தலையிட்டுள்ளமை தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார். இந்த அழைப்பின் மூலம் சம்பந்தன்,சுமந்திரனின் முடிவை பின்பற்றுமாறு ஏனைய தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இருப்பினும் அழைப்பினை ஏற்படுத்தியவர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நகர்வானது தற்போது தங்களது சொந்த விடயங்களுக்காக இந்திய தூதரகத்தையும் … Read more
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக,ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க ,பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாராளுமன்றத்தை வந்தடைந்த அவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று அதிகாரம் … Read more
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி … Read more
காலியில் மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண் ஒருவர் சடலமாக மீட்பு
காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஜேர்மனிக்கு சென்று பின்னர் தனது வீட்டில் வசிப்பதற்காக நாடு திரும்பியவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் ஜேர்மனிக்கு விஜயம் செய்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் நாடு திரும்பியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக … Read more