வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை: தொழிற்சங்கப் பிரதிநிதிகள் – செய்திகளின் தொகுப்பு

எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனப் பல அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தமது சேவையைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு … Read more

இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி

இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நிதி அமைச்சர் இன்று (04) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் பொழுதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத … Read more

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டி அட்டவணை

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் கலந்துக்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில், பேட் … Read more

மகிந்த வெளியிடப் போகும் முடிவு! இன்னும் நாடாளுமன்றிற்குள் வரவில்லை

பிரதமர் மகிந்த ராஜபக்ச இதுவரை நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன  தலைமையில் இன்று காலை  10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.  இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை  வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நாடாளுமன்றம் ஆரம்பமானதில் இருந்து பிரதமர் நாடமாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை. எனினும், பிரதமர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்ததாக  தெரிவிக்கப்படவில்லை.  Source link

பிரதி சபாநாயகரின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டியவின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) காலை பாராளுமன்றத்தில்  ,இதனை அறிவித்தார். இதற்கமைவாக பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கை நாளை (05) இடம்பெறும் என்று சபாநாயகர்  அறிவித்தார். 

மட்டக்களப்பில் 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 200 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று (03) கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கான அனுமதி, இட ஒதுக்கீடு போன்ற பல முக்கிய விடயங்கள் … Read more

மீண்டும் மின்வெட்டு! நேரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (04) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும்  என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய மண்டலங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை … Read more

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (04) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இதன் போது ,நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில்  சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதுதொடர்பில் விளக்கமளிப்பார். பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோப் குழு அறிக்கைள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதமும் … Read more

பல இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு … Read more

பரபரப்பிற்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்: இன்றையதினம் ஏற்படவுள்ள பல அதிரடி திருப்பங்கள்

நாடாளுமன்றம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாக அமையும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன் மறுபுறம் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டு அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமை ஏற்படும். இந்நிலையில், … Read more