மேற்குலக நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை! வெளியான தகவல்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.  ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பில் மேற்குலக நாடுகள் பிறப்பித்துள்ள தடை இலங்கையை பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தடை விதிக்காத காரணத்தினால் எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு … Read more

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் சாத்தியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய மிகப் பெரிய சவால் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51ம் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட … Read more

UAE இருந்து டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட Coral Energy DMCC நிறுவனத்திற்கு டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மார்ச் 01 முதல் அக்டோபர் 31 வரையிலான எட்டு மாத காலத்திற்கு டீசல் இறக்குமதிக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) வழங்க பதிவுசெய்யப்பட்ட சப்ளையர்களிடமிருந்து ஏலம் கோரப்பட்டுள்ளது. ஜூன் 01 முதல் டிசம்பர் 31 வரையிலான 7 மாத காலத்திற்கு … Read more

கர்ப்பிணி பெண் கொலை வழக்கும்! – ஐந்தாண்டுகளின் பின்னான கைதும்

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் குற்ற புலனாய்வு துறையினரின் விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் கடந்த மாதம் 2ம் திகதி புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் … Read more

ஐ.நா கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டது! – அரசாங்கம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று (15) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு … Read more

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது… வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

சுவிட்சலாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக விடயங்களை முன் வைத்து, அவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சவால்களும் இலங்கையும்” என்ற தலைப்பில் … Read more

பசுமை விவசாயத்திற்கான வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம்… – மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்

பெரும் போகத்தில் சேதனப் பசளையை சரியாகப் பயன்படுத்திய விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றுள்ளனர். அதில் ஈடுபடாத விவசாயிகளுக்கும் முறையாக தெளிவுபடுத்தி ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் பசுமை விவசாயத்துக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் வெற்றி பெறலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று, (15) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. பெரும் போகத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் 48 … Read more

இனி ஆடைகளும் கொள்வனவு செய்ய முடியாது! இலங்கை மக்களை திண்டாட வைக்கும் விலை உயர்வு

இலங்கையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  இதன் காரணமாக  இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள்  பாதிக்கப்படுகின்றது.   அந்த வகையில், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை அறவிடுகின்றன. ஆனால் தற்போது அது … Read more

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆலோசனைக் குழு…

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01. பேராசிரியர் எச்.டி.  கருணாரத்ன 02. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த 03. கலாநிதி துஷ்னி வீரகோன் 04. திரு.தம்மிக்க பெரேரா 05. திரு.கிருஷான் பாலேந்திர 06. திரு. அஷ்ரப் ஒமார் 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய 08. திரு. விஷ் கோவிந்தசாமி 09. திரு. எஸ். ரெங்கநாதன் 10. திரு.ரஞ்சித் பேஜ் 11. திரு. சுரேஷ் … Read more