இனி இது போன்ற சலுகை கிடைக்காது! 21 ஆயிரத்துக்கு ஐபோன் 13 விற்பனை

iPhone 13 மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஒன்றாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மொபைலாக இருந்தாலும் இன்னும் பிரபலமாக உள்ளது. இன்னும் பலர் இந்த போனை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் விலை அதிகம் என்பதால் வாங்க முடியவில்லை. அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த சலுகை வந்துள்ளது. 21 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் கிடைக்கும். எப்படி என்று பார்க்கலாம்? Apple iPhone 13 … Read more

ரூ.30 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் ஐபோன் 12 – வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ஐபோன் 12 நிச்சயமாக சற்று பழைய மாடல்தான். ஆனாலும் இதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. குறைந்தபட்சம் புது மாடல் மொபைல்களை வாங்க முடியாவிட்டாலும், ஐபோன் 12 மொபைலையாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் இன்னும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்கிற மாதிரியான அறிவிப்பு தான் இப்போது வெளியாகியுள்ளது. வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் நிச்சயம் வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். சிலருக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது இப்போது சாத்தியம். எப்படி … Read more

ட்விட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ்

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக அளவில் வரும் 7-ம் தேதி த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிகிறது. கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது … Read more

இனி வெரிஃபைடு கணக்குள்ள பயனர்கள் மட்டுமே TweetDeck பயன்படுத்த இயலும்: ட்விட்டரின் அடுத்த அதிரடி

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரின் ட்வீட்டெக் (TweetDeck) சேவையை இனி சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைடு) கணக்கு உள்ள பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார். மாஸ் லேஆஃப் ஆரம்பித்து ப்ளூ டிக் கட்டண முறை வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித … Read more

மின் கட்டணம் அதிகம் வருகிறதா? இதை செய்தால் உங்கள் மின் கட்டணம் குறையலாம்!

புதிய ‘டைம் ஆஃப் டே (ToD)’ கட்டண முறை மற்றும் ஸ்மார்ட் அளவீட்டு ஆகியவை உங்கள் மின் கட்டணத் தொகையை கணிசமாக மாற்றும். இந்த மாற்றங்களைச் செயல்படுத்த, மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது. புதிய ToD கட்டண முறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள மின்சார நுகர்வோர் பகல் நேரத்தில் தங்கள் பயன்பாட்டைத் திட்டமிடுவதன் மூலம் மின் கட்டணத்தில் 20 சதவீதம் வரை சேமிக்க முடியும்.  புதிய முறை பகல் நேரத்தில் … Read more

இந்தியாவில் அதிரடியாக குறைந்த மொபைல், ஸ்மார்ட் டிவி விலை! ஏன் தெரியுமா?

மத்திய அரசின் சமீபத்திய கூற்றுப்படி, இப்போது பயனர்கள் 27 இன்ச் வரை ஸ்மார்ட் டிவிகள், மொபைல் போன்கள் மற்றும் பலவற்றை வாங்க 31.3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. பத்திரிக்கை தகவல் பணியகம் வீட்டு மின்னணு பொருட்கள் GST விகிதங்கள் குறைக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் ட்விட்டர் வழியாக செய்தியைப் பகிர்ந்துள்ளது.  முன்னதாக, மொபைல் போன் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் 31.3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தற்போது ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. இதன் … Read more

மோட்டோரோலா ரேசர் 40, ரேசர் 40 அல்ட்ரா போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப்-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மோட்டோரோலா ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஃபோல்டபிள் போன் என அறியப்பட்டது. இந்தச் சூழலில் இந்த இரண்டு போன்களும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா … Read more

யூடியூபிலும் இனி ஆன்லைன் விளையாட்டுகள்: ரகசியம் வெளியானது

நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது. இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more

பழைய போனிலிருந்து புதிய போனுக்கு சாட்களை எளிதில் மாற்றலாம்: புதிய அம்சம் @ வாட்ஸ்அப்

சான்பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு சாட்களை எளிதில் மாற்றும் வகையில் புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிகிறது. மெசேஜ், மீடியா உட்பட அனைத்தையும் இதன் மூலம் பயனர்கள் மாற்றிக் கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசேன்ஜரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் … Read more

2G to 4G | ரூ.999-க்கு ரிலையன்ஸ் ஜியோவின் ‘ஜியோ பாரத்’ போன் அறிமுகம்: சிறப்பு அம்சம் என்ன?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் ‘ஜியோ பாரத்’ எனும் 4ஜி போனை ரூ.999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 2ஜி நெட்வொர்க் பயனர்களை 4ஜி நெட்வொர்க் பயனர்களாக மாற்றும் பலே திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஜியோ. இணைய இணைப்புடன் இயங்கக் கூடிய மலிவு விலையிலான போன் என ஜியோ இதனை பிராண்ட் செய்கிறது. மாதாந்திர ரீசாரஜ் கட்டணத்தில் ஃப்யூச்சர் போன்களுக்கான மற்ற நெட்வொர்க் ஆப்பிரேட்டர்களுடன் ஒப்பிடும்போது இதன் கட்டணம் 30 சதவீதம் மலிவு என … Read more