சாட்ஜிபிடியின் சரிவு தொடங்கியது

ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சாட்ஜிபிடியின் வருகை தொழில்நுட்ப உலகில் பெரும் அலையாக உருவெடுத்தது. எல்லோரும் அதனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையின் இப்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிகை என்பது 10 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது.  இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மூலம் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா? அல்லது மைக்ரோசாப்ட் … Read more

iPhone 14 -இல் நம்ப முடியாத அதிரடி தள்ளுபடி: அசத்தும் பிளிப்கார்ட்

ஆப்பிள் ஐபோன் 14 டீல்: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! ஆப்பிள் ஐபோன் 14 இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள போன் ஆகும். இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பு உள்ளதால் பயனர்களுக்கு இது மிகவும் பிடித்த ஐபோனாக உள்ளது. இது ஐபோன் 13 போல தோற்றமளிக்கிறது. எனினும் இது மிகவும் வித்தியாசமானதான மற்றும் ஒரு சக்திவாய்ந்த கேமராவையும் சக்திவாய்ந்த ப்ராசசரையும் கொண்டுள்ளது. இப்போது இந்த ஐபோன் குறித்த ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. … Read more

WhatsApp சீக்ரெட்ஸை நீங்கள் பாதுகாக்க செட்டிங்ஸில் இருக்கும் 9 பிரைவசி அம்சங்கள்

வாட்ஸ்அப் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலிகளில் ஒன்று. இந்த செயலி யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், அதில் இருக்கும் 10 பிரைவசி அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள். அவை இப்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன. சாட் லாக் முதல் பல அம்சங்கள் இருக்கின்றன. அதாவது, குறிப்பிட்ட சாட்டிங்கிற்கு கைரேகை ஸ்கேனிங் அவசியம் என வைத்துக் கொள்ளலாம். WhatsApp-ல் இருக்கும் 9 தனியுரிமை அம்சங்கள்: … Read more

ரியல் மீ அறிமுகப்படுத்தும் சூப்பர் கேமிங் ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள்

கேம் விளையாடுவது என்பது இப்போது பிரபலமாக இருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு பலரும் கேமிங்களுக்கு அடிமையாகிவிட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்குக்காக கேம்கள் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். லேப்டாப் மற்றும் மொபைல்களில் மட்டுமே கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மொபைல்களில் கேம் விளையாடுபவர்கள், நல்ல தரமான மொபைலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உகந்த மொபைல் தான்  Realme 9i 5G. மிகச் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ரியல்மி நிறுவனத்தின் இந்த … Read more

Maruti Suzuki Invicto Vs Toyota Hycross: உங்களுக்கு ஏற்ற கார் எது? முழு ஒப்பீடு இதோ

Maruti Suzuki Invicto Vs Toyota Hycross: மாருதி சுசுகி இறுதியாக MPV அதாவது பல்நோக்கு வாகனப் பிரிவில் நுழைந்துள்ளது. மாருதி சுஸுகி இந்த பிரிவில் தனது முதல் மற்றும் விலை உயர்ந்த காரை ஜூலை 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. காரின் பெயர் மாருதி சுசுகி இன்விக்டோ. அதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நிறுவனம் இந்த காரை 3 வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.24.79 லட்சம் ஆகும். டாப் வேரியண்டின் விலை ரூ.28.42 … Read more

ஒரே ரீச்சார்ஜில் அமேசான் நெட்பிளிக்ஸ் எல்லாம் இலவசமாக கொடுக்கும் ஜியோ

இப்போதெல்லாம் Netflix மற்றும் Amazon Prime-ல் புதிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் பார்ப்பது இப்போது அதிகமாகிவிட்டது. உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை சிறந்த படங்களையெல்லாம் பார்த்து ரசிக்கலாம். சிலர் OTT சேவைகளுக்கு தனியாக ரீச்சார்ஜ் செய்வதில்லை. பட்ஜெட் பிரச்சனை காரணமாக ஓடிடி சேவைகளை வாங்கவில்லை என்றால் மொபைல் ரீச்சார்ஜ்கள் மூலம் நீங்கள் பெற முடியும். அதாவது மொபைல் ரீசார்ஜ் உடன், நீங்கள் இலவச OTT சந்தாவைப் பெறுவீர்கள். குறிப்பாக, Netflix மற்றும் Amazon Prime … Read more

மெட்டாவின் த்ரெட்ஸ்: வழக்கு தொடுக்கும் முடிவில் எலான் மஸ்கின் ட்விட்டர்

சான் பிரான்சிஸ்கோ: ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகமும் மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்துத்தான் பேசி வருகின்றன. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே எண்ணற்ற மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அது ட்விட்டர் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அதற்கு மாற்றாக மெட்டா நிறுவனத்தின் சார்பில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இணைய உலக சமுதாயமே அதை தங்கள் போன்களில் … Read more

Realme Narzo 60 Series அறிமுகம்: அதிக விலை போன்களுக்கு ஆப்பு.. விலை, பிற விவரங்கள் இதோ

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ (Realme) இந்தியாவில் ரியல்மீ நார்சோ 60 (Realme Narzo 60) தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இரண்டு மாடல்கள் உள்ளன (Realme Narzo 60 மற்றும் Realme Narzo 60 Pro). இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகளும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் இடையே மிக அதிகமாகவே இருந்தது.  … Read more

ரூ. 20000க்கு பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த லேப்டாப்கள்!

இந்தியாவில் 20000க்கு கீழ் உள்ள சிறந்த மடிக்கணினிகள் பல விருப்பங்கள் இருப்பதால், சரியானதைத் தேர்ந்தெடுப்பது குழப்பமாக இருக்கலாம். இந்தியாவின் சிறந்த மடிக்கணினிகளின் இந்த பட்டியலின் மூலம், அற்புதமான விலை மற்றும் சிறந்த அம்சங்களில் சிறந்தவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.  Lenovo E41-55 லேப்டாப்  20000க்கு கீழ் உள்ள சிறந்த மடிக்கணினிகளை தேடுகிறீர்களா? லெனோவா லேப்டாப் 14 அங்குல திரை அளவுடன் வந்து சிறந்த காட்சியை வழங்குகிறது. இது விண்டோஸ் 11 ஐ இயக்க முறைமையாக முன்பே ஏற்றியுள்ளது. … Read more

ட்விட்டருக்கு போட்டியாக ‘த்ரெட்ஸ்’ புதிய செயலி: மெட்டா நிறுவனம் அறிமுகம்

புதுடெல்லி: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ (Threads) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. சிறிய பதிவுகளுக்கான சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அளிக்கும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (ரூ.3.60 லட்சம் கோடி) மதிப்பில் வாங்கினார். அதையடுத்து அவர் ட்விட்டர் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர … Read more