WhatsApp: சுமார் 19 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை காலி செய்த மெட்டா!
WhatsApp Banned May 2022: மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் கோடிக் கணக்கிலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் இது முதன்மை தளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. பிற செயலிகளுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் செயலி அரட்டை, அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வப்போது முடக்கி வருகிறது. … Read more