காத்திருக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கலாம், எடை பார்க்கலாம்… பெருங்களூருவில் வருகிறது அதிநவீன பேருந்து நிறுத்தங்கள்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து வசதிகளையும் இருந்த இடத்தில் இருந்து பெறும் நிலை வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பல அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அமையவுள்ளது. பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் … Read more

பயனர் தகவல்களை பயன்படுத்திய விவகாரம் | ட்விட்டருக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்

வாஷிங்டன்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) இந்த அபராதத்தை விதித்துள்ளது. உலக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சமூக வலைதளங்களில் ட்விட்டர் நிறுவனமும் ஒன்று. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் ட்விட்டரை பயன்படுத்தி தங்களது கருத்துகளை உலக மக்களுடன் பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு லாப … Read more

Yasin Malik: காஷ்மீரில் பதற்றம் – இணைய சேவைகள் அதிரடியாக முடக்கம்?

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளித்தாகக் கூறி தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமாகக் கூறப்படும் ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் மீது போடப்பட்ட வழக்கு டெல்லியில் நடந்து வந்தது. இவ்வேளையில், டெல்லி நீதிமன்றம் யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் ஏற்படும் போராட்டங்கள், கலவரங்களைத் தடுக்க ஒன்றிய அரசு தற்போது காஷ்மீரில் இணைய சேவைகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சேவையில் … Read more

OnePlus 10R 5G: ஒன்பிளஸ் ஃபேன்ஸ்… ஒன்பிளஸ் 10R இப்போது ரூ.13,000 தள்ளுபடி விலையில்!

OnePlus 10R 5G: ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒப்போவுடன் கூட்டு சேர்ந்து அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்கிறது. இந்த ஆண்டு மட்டும் நிறுவனம் மூன்று போன்களை அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் 10R 5G ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் அடிப்படை வகையின் விலை ரூ.38,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி ரூ.25,500க்கு வாங்கலாம் என்று பார்க்கலாம். Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – ரெட்மி நோட் … Read more

Realme: 48MP கேமரா கொண்டிருக்கும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விற்பனை தொடக்கம்!

Realme: ரியல்மி அதன் சக்திவாய்ந்த Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனின் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. போன் பாக்ஸி வடிவமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது. ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி போனின் முதல் விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெறுகிறது. Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய … Read more

Password Manager: கவலை வேண்டாம்… பாஸ்வேர்டு கசிந்தால் கூகுள் எச்சரிக்கும்!

Password Manager: பயனர்களின் பாதுகாப்புக்காக கூகுள் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் பயனர்களின் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) திருடப்பட்டால், உடனடியாக கூகுள் அசிஸ்டன்ட் எச்சரிக்கும். கூகுள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறந்த வசதியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு கடவுச்சொல் சரிபார்ப்பு கருவியை கூகுள் பயன்படுத்துகிறது. எச்சரிக்கையாக, பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றி அவற்றை வலுவாக வைத்திருக்குமாறு கூகுள் அசிஸ்டன்ட் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கடவுச்சொல் கசிந்திருப்பதை பெரும்பாலும் நீங்கள் உணருவதில்லை. ஆனால் இப்போது கூகுள் உங்களை … Read more

இனி டிஜிலாக்கர் சேவையை வாட்ஸ் அப்பிலும் பெறலாம்

புதுடெல்லி: ஆவணங்களை சேமித்து வைக்கும் டிஜிலாக்கர் சேவை இனி வாட்ஸ்அப் மூலமும் பெறலாம். கடந்த 2020 மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் MyGov Helpdesk உருவாக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வசதியை அது வழங்கியது. இந்நிலையில் தற்போது டிஜிலாக்கர் வசதியையும் MyGov ஹெல்ப் டெஸ்க் வழங்குகிறது. 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாக Hi அல்லது Namaste அல்லது Digilocker என்று அனுப்ப வேண்டும். இதையடுத்து டிஜிலாக்கர் தளத்தைப் பயன்படுத்துவதற்கான இணைப்பு … Read more

அமேசானில் பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25999 – அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்

புது டெல்லி: இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஒரு பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. அதை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உலகம் முழுவதும் தங்களது தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை வீடு தேடி சென்று விநியோகித்து வருகிறது அமேசான். இதில் உலக மக்கள் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராகவும், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளராகவும் உள்ளனர். இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இ-காமர்ஸ் தளங்களில் அமேசான் தளமும் ஒன்று. இந்நிலையில், இந்த … Read more

Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – ரெட்மி நோட் 11டி ப்ரோ+ அறிமுகம்!

சியோமி நிறுவனத்தின் பிராண்டான ரெட்மி பயனர்களுக்கு பட்ஜெட் முதல் உயர்ரக பட்ஜெட் ரேஞ் வரை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் பல திறன் வாய்ந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலும், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5ஜி புராசஸர், 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5ஜி இணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. Redmi Note 11T Astro Boy Edition எனும் சிறப்புப் பதிப்பையும் குறைந்த அளவில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Telecom: சிம்கார்டு … Read more

Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!

Telecom: புதிய சிம் பெற பொதுவாக என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எந்தக் கடைக்கும் சென்று, அடையாள அட்டையைக் காட்டி சிம் கார்டை வாங்கலாம். சில மணி நேரம் கழித்து, சிம் கார்டும் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் அது இப்போது நடக்காது. புதிய சிம் கார்டுகள் தொடர்பான சில விதிமுறைகளை அரசு மாற்றியமைத்ததே இதற்குக் காரணம். சில வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வாங்குவது முன்பு போல் எளிதாக இருக்காது. இது பலருக்கு பிரச்னையாக இருக்கலாம். ஆள்மாறாட்டம் போன்ற … Read more