Helmet Coolers: மண்ட கனம் இல்லாம இனி பைக் ஓட்டலாம்!

Cooling Devices For Helmets: அனல் கக்கும் சூரியனின் கீழ் தலைக்கவசம் அணிந்து கொண்டு நெடுந்தூரம் பைக் ஓட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. இது மண்டையை சூடாக்கி, வாகனம் ஓட்டுபவருக்கு ஒருவித அசெளகரியத்தை உண்டாக்குகிறது. ஆனால், ஹெல்மெட்டை அணியாமல் வாகனமும் ஓட்ட முடியாது. ஏனெனில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானது. இந்த சூழலைப் புரிந்துகொண்ட நிறுவனம் ஒன்று, கோடையில் ரைடர்களுக்கு பயனளிக்கும் விதமான புதிய கேட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. ஹெல்மெட்டை ஏசியாக மாற்றலாம் இது … Read more

வரலாற்றில் முதல் முறை | நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடி வளர்த்த விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு … Read more

WhatsApp Warning: மோசடியில் இது புதுசு – எச்சரிக்கும் வாட்ஸ்அப்?

Online Scam: வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தி பகிரும் தளமாக விளங்குகிறது. இது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதை மிகவும் எளிதாக்குகிறது. இதன் விளைவாக, மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பயனர்களின் கணக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். தற்போது அப்படி ஒரு புதுவித மோசடி குறித்து தான் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஸ்டாகிராம் பயனருக்கு டைவர்ட் கால் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் புதிய மோசடி தொடங்கியுள்ளது என்றும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இன்ஸ்டாகிராம் … Read more

கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி

புதுடெல்லி: கூகுள் இணையதள நிறுவனம் மொழிபெயர்ப்பு சேவையை அளித்து வருகிறது. கூகுள் இணையதளத்தில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பு வசதியில் தமிழ், இந்தி, பெங்காலி, பிரெஞ்சு உட்பட உலகின் 133 மொழிகள் உள்ளன. பயனாளிகள் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ எனப்படும் மொழிபெயர்ப்பு வசதி மூலம் தங்களுக்கு தேவையான மொழிகளை அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது மொழிபெயர்ப்பு வசதியில் சம்ஸ்கிருதம் உட்பட 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான கோரிக்கைகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு … Read more

'கூகுள் வாலெட் அப்ளிகேஷன்' – I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம்

கலிபோர்னியா: ‘கூகுள் வாலெட் அப்ளிகேஷன்’ என்ற கைபேசி இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் இன்புட்/அவுட்புட் எனப்படும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் நேரடியாக நடைபெற்றது. இருந்தாலும் இதில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்த … Read more

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைக் காலமாக வரிசையாக ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், எட்ஜ் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் எட்ஜ் 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எட்ஜ் 30 புரோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மெல்லிய (Thin) போன் … Read more

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு – ஏன் தெரியுமா?

டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது, கடந்த சில நாள்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பயனர்களின் தகவல்களை பல்வேறு வழிகளில் திருடுகின்றனர். மேலும், அதே தரவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In) இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 12L இயங்குதளங்கள் நிறுவப்பட்ட … Read more

Elon Musk: "ட்விட்டரை ஒப்படைக்கிறோன் – ஆனால், அதற்கு நான் இறக்கவேண்டும்"

ஏப்ரல் 25 அன்று ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடிக்கு வாங்கியதில் இருந்து, டெஸ்லா CEO மற்றும் SpaceX நிறுவனர் எலான் மஸ்க் பல சந்தேகத்திற்கிடமான ட்வீட்டுகளை பதிவிட்டு வருகிறாட். இதைத் தொடர்ந்து, மே 9 அன்று, எலான் மஸ்க் “நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்” என்று ட்வீட் செய்து பீதியைக் கிளப்பினார் இதற்கு உடனடியாக பதில் கொடுத்த மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கப்படும் யூடியூப் நட்சத்திரமான ஜிம்மி டொனால்ட்சன், “அப்படி நடந்தால், எனக்கு ட்விட்டரை வழங்குவீர்களா” என்று … Read more

"ரிசர்வ் வங்கியின் அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்டை நிறுத்தியுள்ளோம்" காயின்பேஸ் சிஇஓ

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முறையற்ற வகையிலான அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்ட் முறையை தங்கள் தளத்தில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் காயின்பேஸ் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங். கிரிப்டோ கரன்சிகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் தளமாக உள்ளது காயின்பேஸ். அமெரிக்காவில் கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் இந்தியாவிலும் தனது … Read more

Nothing: நத்திங் போன் பிளிப்கார்ட்டில் வெளியாகிறது – டீஸ் செய்த நிறுவனம்!

ஸ்மார்ட்போன் பயனர்களிடத்தில் இருக்கும் ஒரே ஒரு ஏக்கத்தை போக்கும் வகையில் தான் இந்த நிறுவனம் தற்போது செயல்பட்டுவருகிறது. ஆம், நத்திங் நிறுவனத்தின் மீது பயனர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுவதாக அறிவித்தது. அதனுடன், புதிய NothingOS வெளியிடப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு முன்பே, நத்திங் ஓஎஸ் ஸ்கின்னை வெளியிட்டது. இது முதலில், பெரும்பாலான பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் வெளியிட்ட … Read more