சென்னையில் பிரபல 'காம்ப்ளக்ஸ்' தியேட்டர் மூடல்?
சென்னையில் பழைய சிங்கிள் தியேட்டர்கள், சில தியேட்டர் வளாகங்கள் மூடப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னை, அசோக் நகர், அசோக் பில்லர் அருகிலும், மெட்ரோ ரயில் நிலையம் எதிரிலும் உள்ள பிரபல உதயம் தியேட்டர் வளாகம் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 1983ம் ஆண்டு இந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. கடந்த 41 வருடங்களாக செயல்பட்டு வந்த இத்தியேட்டர் மூடப்பட உள்ளது என்ற தகவல் சினிமா ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. … Read more