அந்த கவலை என் வாழ்நாள் முழுக்க இருக்கும் : விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய பின் ரம்பா பேட்டி
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலப் பிரச்னையால் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் அதன்பின் தொடர்ச்சியாக அவரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா, தற்போது சென்னை வந்துள்ளார். தனது கணவர் இந்திரகுமார் உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கும் … Read more