'பான் இந்தியன் சுந்தரி' : சன்னி லியோன் நடிக்கும் புதிய வெப்சீரிஸ்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். ஆனால் மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத்திறமையையும் வெளிக்கொண்டுவரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா, ஷீரோ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் சன்னி லியோன். … Read more

Ameer: சூர்யா, கார்த்தியை மிஞ்சிய அமீர்.. மிக்ஜாம் நிவாரண நிதி.. அள்ளிக் கொடுத்த ரியல் பருத்திவீரன்

சென்னை: கடந்த ஓரிரு மாதங்களாக அமீரின் பருத்திவீரன் பட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், சூர்யா, கார்த்தியை மிஞ்சும் அளவிற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர். மிக்ஜாம் நிவாரண நிதி வழங்கிய அமீர்மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யா, த்ரிஷா, நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்த

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ராட்சச ராஜாவுக்காக இணைந்த ராணா – தேஜா

பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபலமான நடிகர் ராணா முழு நேர ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் ஹீரோ, வில்லன் மற்றும் வெப் சீரிஸ் என கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து பயணித்து வருகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படமான ராட்சச ராஜா என்கிற படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். கடந்த 2017ல் ராணா நடித்த நேனே ராஜா நேனே மந்திரி என்கிற படத்தை இயக்கிய தேஜா அந்தப்படத்தின் … Read more

Boat teaser: படகுக்குள் நடக்கும் போராட்டம்..யோகி பாபுவின் 'போட்' பட டீசர் வெளியானது!

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ள போட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ள புலி லீலா, அக்ஷதா தாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் ரஞ்சித் பதவி விலக கோரி வலுக்கும் எதிர்ப்பு

மலையாள திரையுலகில் மிக முக்கியமான இயக்குநர்களின் ஒருவர் இயக்குனர் ரஞ்சித். மோகன்லால், மம்முட்டி ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ள இவர் உணர்வுபூர்வமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்றவர். அய்யப்பனும் கோசியும் படத்தில் பிரித்விராஜின் கோபக்கார தந்தையாக நடித்திருந்தது இவர்தான். சமீப காலமாக படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கும் இயக்குனர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமியின் சேர்மனாக பொறுப்பு வகித்து வருகிறார். அந்தவகையில் கேரள அரசு விருதுக்கான படங்களை, நபர்களை தேர்ந்தெடுப்பது, கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட … Read more

Demonte colony 2: அச்சத்தை விதைக்கும் டிமான்ட்டி காலனி 2 பட ட்ரெயிலர்.. ரசிகர்களை கவர்ந்த மேக்கிங்!

சென்னை: அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

ராம் படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? – மனம் திறந்த ஜீத்து ஜோசப்

திரிஷ்யம் படங்களில் அடுத்தடுத்த பாகங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து வெளியான டுவல்த் மேன் திரைப்படம் ஒடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக வரும் டிசம்பர் 21ம் தேதி இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள 'நேர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதேசமயம் டுவல்த் மேன் படத்திற்கு முன்பே மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை துவங்கினார் … Read more

Sivakarthikeyan: மீண்டும் லீக்கான சிவகார்த்திகேயன் படத்தின் காட்சிகள்.. என்ன இப்படி ஆகிடுச்சு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. மாவீரன் படத்தின் சூப்பர் ஹிட்டை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மட்டும் ஏறக்குறைய 3 மாதங்கள் எடுக்கப்பட்டன.

'எல்ஐசி' எனத் தலைப்பு வைக்க முடியுமா?

ஒரு வாரத்திற்கு இரண்டு சர்ச்சைகளாவது தமிழ் சினிமாவில் வந்துவிடுகிறது. இந்த வார சர்ச்சையில் தலைப்பு சர்ச்சை ஒன்று உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா நடிக்க 'எல்ஐசி' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அந்தத் தலைப்பு தனக்கு சொந்தம் என இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார். மீறி அத்தலைப்பை வைத்தால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். … Read more

Google: 2023ல் உலகளவில் அதிகமாக தேடப்பட்ட படங்கள்.. கூகுள் வெளியிட்ட பட்டியலில் இந்திய படங்கள்!

சென்னை: 2023ம் ஆண்டு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் சர்வதேச அளவில் பல விஷயங்களை திரையுலகம் சந்தித்துள்ளது. இந்த ஆண்டில் ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த படங்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் அதிகமாக வெளியாகின. இந்திய அளவில் ஷாருக்கானின் 2 படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடி ரூபாய்