ரத்தம் விமர்சனம்: க்ரைம் கதைக்கான அழுத்தமின்றி தவிக்கும் திரைக்கதை; படம் சொல்ல வருவது என்ன?
பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), தாய் இல்லாத தன் மகளுடன் கொல்கத்தாவில் வசித்துவருகிறார். தன் பத்திரிகை வேலையால் மனைவியை இழந்த சோகத்தில் குடிப்பழக்கத்திற்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டு, பத்திரிகைத் துறையிலிருந்து முற்றாக விலகியிருக்கிறார். மறுபுறம், சென்னையிலுள்ள ‘வானம்’ என்கிற பிரபல புலனாய்வு இதழின் பத்திரிகையாளரும் ரஞ்சித் குமாரின் உற்ற நண்பருமான செழியன் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து செழியனின் தந்தையும் வானம் இதழின் நிறுவனருமான ரத்தின பாண்டியனின் (நிழல்கள் ரவி) கோரிக்கையை ஏற்று, தான் ஆசிரியராகப் … Read more