ரஜினி 170 – முதல் முறை ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள்

தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான். 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக … Read more

கூல் சுரேஷை யாராவது கன்ட்ரோல் பண்ணுங்கப்பா.. தன்னோட பெயருக்கு முன்னாடி பூ போட்டு கூப்பிடுறாங்களாம்?

சென்னை: சும்மாவே தியேட்டர் முதல் நாள் ஷோவில் அலப்பறையை கிளப்பும் கூல் சுரேஷ் கடைசியாக நடந்த அந்த சர்ச்சைக்கு பின்னர் தனக்கு வேலையே இல்லை என அழுது புலம்பி வீடியோ வெளியிட்ட நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே விஸ்வரூபம் பிரச்சனை காரணமாக கமல்ஹாசன் நாட்டை விட்டே ஓடப் போகிறேன்

ரத்தம் படம் குறித்து மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி!

“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!  

`ரோலக்ஸ் அவன் பேரு டில்லி!' சூர்யா & கார்த்தியின் பிரமாண்ட லைன்- அப்கள்; முழுப் பார்வை இதோ!

கோலிவுட்டின் உச்சங்களில் இருவர் நடிகர் சூர்யாவும் அவரது தம்பியான நடிகர் கார்த்தியும். ‘ரோலக்ஸ்’ மற்றும் ‘டில்லி’யின் அடுத்தடுத்த பிரம்மாண்ட ‘லைன்- அப்’களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதனையடுத்து இந்த இருவரின் கைகளில் இருக்கும் படங்களின் வரிசை குறித்து இப்போது பார்க்கலாம். சூர்யா: கங்குவா: சூர்யா நடிக்க இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து … Read more

தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகளும் முடிந்துள்ளன. இம்மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட தொடங்கிவிட்டது. இதற்கிடையே இரண்டு தினங்களுக்கு முன்பே லியோ படத்தை தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த வகையில், படம் திரைக்கு வருவதற்கு 22 நாட்களுக்கு முன்னதாகவே இந்த படத்தை … Read more

Bigg Boss 7 Day 1: வெளியேறிய 6 போட்டியாளர்கள்..டேஞ்சர் ஜோனில் 2 பேர்.. வீட்டில் நடந்தது என்ன?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் முதல் நாளான நேற்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். பிக் பாஸ் சீசனில் வழக்கமாக ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கும் இந்த முறை ஸ்மால் ஹவுஸ், பிக் ஹவுஸ் என இரண்டு வீடு இருக்கிறது. இதில் ஸ்மால் பாஸ் இருக்கிறார்.

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான, வி.ஏ.துரை(59) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, என்னம்மா கண்ணு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில், தனியாக வசித்து வந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டார். அவருக்கு நடிகர் பலரும் உதவி செய்தனர். இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த … Read more

Bigg Boss Tamil 7 Eviction: இந்த 7 பேரில் அவர் தான் முதல் பலி ஆடா?.. பிக் பாஸ் தமிழ் 7ல் சம்பவம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பமானது. கமல்ஹாசன் கெத்தாக கோட் சூட் அணிந்து காரில் சும்மா சர்ரென வந்து நிகழ்ச்சி மேடையில் ஏறி 7வது சீசனையும் அட்டகாசமாக ஆரம்பித்து வைத்து 18 போட்டியாளர்களையும், இரண்டு வீடு கான்செப்ட்டையும் அறிமுகம் செய்து வைத்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆட்டம் பாட்டம்

பிரபாஸின் சலார் ஒரு ரீமேக் படமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள படமான சலார் டிசம்பர் 22 ஆம் தேதி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.    

'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயைமைப்பில், விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் நடிப்பது பற்றி மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் … Read more