ஈரமான ரோஜாவே 2-வில் மீண்டும் இயக்குநர் மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசனின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை ஆரம்பத்தில் இயக்குநர் தாய் செல்வம் இயக்கி வந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொடரை சுந்தரம் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலிலிருந்து விலகிவிட்டார். இதனை சுந்தரம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சீரியல் குழுவுக்கு … Read more

Kerala Boycott Leo: ட்ரெண்டாகும் பாய்காட் லியோ… விஜய்க்கு எதிராக மோகன்லால் ரசிகர்கள் போர்க்கொடி

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இந்தப் படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி வந்தன. அதன் தொடர்ச்சியாக இன்றும் லியோ அப்டேட் வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், லியோ அப்டேட்டுக்கு பதிலாக Kerala Boycott Leo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ரூ.3.5 கோடியில் சொகுசு கார் வாங்கிய டாப்ஸி

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. சினிமாவில் நடிப்பதோடு கங்கனா ரணாவத் போன்று நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்துகளை துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறவர். சினிமாவில் நடிப்பதோடு தனது தங்கையுடன் இணைந்து வெட்டிங் பிளானர் உள்ளிட்ட பல தொழில்களையும் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானுடன் 'டன்கி', தமிழில் 'ஏலியன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் … Read more

படப்பிடிப்பில் திடீரென மயங்கிய ஒப்பனை பெண்.. மருத்துவமனைக்கு சென்ற சில மணிநேரத்திலேயே உயிரிழந்தார்!

சென்னை: சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்து ஒப்பனைப் பெண் உயிரிழந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட்

பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் விஷ்ணு?

சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் விஷ்ணு, ‛ஆபிஸ், சத்யா மற்றும் சொல்ல மறந்த கதை' என சில ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது வேற மாறி ஆபிஸ் என்கிற வலை தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில சீசன்களாகவே இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், அப்போது விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த சீசனில் விஷ்ணு கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது நண்பர்களும் … Read more

கன்ஃபார்ம் ஆயிடுச்சு.. பிக் பாஸ் செல்லும் 7 போட்டியாளர்கள் இரண்டு பேரின் எக்ஸுகள்?

சென்னை: பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கிறுக்குத்தனத்திற்கும் எல்லை உண்டு – கூல் சுரேஷை எச்சரித்த ஐஸ்வர்யா

சினிமா நடிகர் கூல் சுரேஷ் சமீபத்தில் மன்சூர் அலிகான் பட விழாவில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு பலவந்தமாக மாலை அணிவித்தார். இதனால் எரிச்சலடைந்த ஐஸ்வர்யா மேடையிலேயே மாலையை கழட்டி வீசி தனது அதிருப்தியை காட்டியிருந்தார். இதை தவறு என மன்சூர் அலிகானும் மேடையிலேயே சுட்டிக்காட்ட தொடர்ந்து கூல் சுரேஷுக்கு எதிராக பலரும் கண்டித்து பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து கூல் சுரேஷும் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசி … Read more

Kamal Robo Shankar: “வீட்ல விசேஷங்க..?” குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது மகள் இந்திரஜாவும் சின்ன திரையில் இருந்து சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரோபோ சங்கர் தனது மனைவி, மகளுடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். குடும்பத்துடன்

திரைப்படம் ‘Are U Ok Baby’: விமர்சனம் மற்றும் படத்தின் பார்ப்பனத்தை அறிந்து கொள்ளுங்கள்

“ஆர் யூ ஓகே பேபி” திரைப்படம்: லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் படம் வெளியாகின்றது மங்கி கிரியேட்டிங் லேப்ஸ் தயாரிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஆர் யூ ஓகே பேபி” திரைப்படம் வெளியாகின்றது. இந்த படம் வளர்ப்பு தாய்க்கும் பெற்ற தாய்க்குமான பாச போராட்டத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் கதை. இந்த படம் நடிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி, அபிராமி, கலைராணி, மிஷ்கின், அசோக் முருகா, முல்லை, அனுபமா குமார், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் … Read more

கொலை மிரட்டல் : போலீசில் பிரகாஷ்ராஜ் புகார்

நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் பா.ஜ.விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள் குறித்தும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த … Read more