ஸ்கந்தா படத்தின் டிரைலரை வெளியிடும் பாலையா
போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று(ஆக., 26) ஐதராபாத்தில் நடைபெறுகிறது. … Read more