`விவசாய வேல முடிச்சுட்டுதான் நடிக்க வருவேன்' நடித்தது ஒரே படம்; தேசிய விருது; யார் இந்த நல்லாண்டி?
‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் கடைசி விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தாவுக்காக தேசிய விருதில் ‘Special Mention’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாத்தா நம்மிடையே இல்லையென்றாலும் எங்கிருந்தோ இச்சம்பவத்திற்கு மகிழ்வார். உசிலம்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமம். அங்குதான் நல்லாண்டி தாத்தா கடைசி மூச்சு வரை வாழ்ந்திருக்கிறார். `எவ்ளோ பெரிய வேலையா இருந்தாலும் விவசாயத்துக்குதான் முக்கிய இடம்’ என விவசாயத்தில் ஆழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர், நல்லாண்டி தாத்தா. விவசாயத்தில் கிடைக்கப்பெறும் குறைவான ஊதியத்திலும். ஐந்து பிள்ளைகள், … Read more