Rajini: இரு பிரபலங்களுடன் ஐஸ்வர்யா காட்டும் நெருக்கம்? கண்டித்த ரஜினி..கிளம்பிய புது சர்ச்சை..!

​விவாகரத்து காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தனர். கடந்த 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. மேலும் இவர்களின் பிரிவிற்கு பல விதமான காரணங்கள் இணையத்தில் வலம் வர இவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிலரோ இவர்களை இணைப்பதற்காக போராடினார்கள். ஆனால் அந்த போராட்டத்திற்கு பயனில்லாமல் போனது. எவ்வளவு சொல்லியும் கேட்காத தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். … Read more

காஷ்மீரில் ஷூட்டிங் முடிந்ததும் 'லியோ' படத்திற்காக லோகேஷின் மாஸ்டர் பிளான்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமான ‘லியோ’ படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.  லோகேஷ்-விஜய் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியானபோதே அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்த ரசிகர்கள், தற்போது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  லியோ படக்குழுவினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  காஷ்மீரில் மகிழ்ச்சியாக படிப்பிடிப்பு நடத்தி வரும் … Read more

ஆண்டவர் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படத்தின் கதை இதுவா.?: கமலின் வேறலெவல் திட்டம்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பல படங்களை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வெளியிட்டராகவும் திகழ்ந்தவர் உதயநிதி ஸ்டாலின் . அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தீவிர அரசியலில் ஈடுபடுவாக கூறிவிட்டு, சினிமாவை விட்டு முழுவதுமாக விலகினார். அண்மையில் இவர் நடித்திருந்த ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் ‘கண்ணை நம்பாதே’. நான்கு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்தப்படம் கடந்த வாரம் … Read more

‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது

கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதேபெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் திரைக்கு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புரொமோஷன் பணிகள் … Read more

ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர்

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பாடகர்கள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சினிமாவிலும் பிரபல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதேபோல மலையாளத்திலும் பிரபல சேனல் ஒன்று நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்று வருபவர் பாடகர் நிகில். இவர் பெரும்பாலும் ஹை பிட்ச்சில் பாடப்பட்டிருக்கும் பாடல்களை தேர்வுசெய்து அதை மிகச்சரியாக பாடி ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளிச் செல்வார். அப்படி சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு … Read more

ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகையின் கணவர், மகள் கழுத்தறுத்து படுகொலை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ராகவேந்திரா தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியல் தொடரிலும் சாந்தி நடித்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு ராஜேஷ் பிராங்கோ, பிரியா, பிரகாஷ் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். மகள் … Read more

ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு

ராணி முகர்ஜி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'மிசஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே'. ஆஷிமா சிப்பர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் கூட சூர்யா இந்த படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டரில் படத்தை பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்திந்தார். படத்தின் கதை இதுதான். ஒரு பெங்காலி தாய், நார்வே நாட்டில் கணவருடன் வசித்து வரும்போது தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி, அவரிடமிருந்து குழந்தையை பறித்து … Read more

தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன்

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2010-ல் நடித்து வெளியான படம் வருடு. குணசேகர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்திருந்தார். இவர் டுவிட்டரில் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் திடீரென இவரது டுவிட்டர் கணக்கை தன்னை பின் தொடர்வதில் இருந்து பிளாக் செய்தார். இதனால் அதிர்ச்சியான பானு ஸ்ரீ இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “நான் யார் என்று … Read more

அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார்

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'அயோத்தி'. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா, அறிமுக நடிகை பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் மீடியாக்களின் சரியான விமர்சனம், மற்றும் பிரபலங்களின் பாராட்டுகளால் சுதாகரித்துக் கொண்டது. தற்போது படம் பெரிய வரவேற்பை பெற்றிருப்பதுடன், நல்ல … Read more

தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் மாமன்னன் படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், அந்த படத்தை முடித்ததும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். ஏற்கனவே தனுசும் – மாரி செல்வராஜூம் இணைந்த கர்ணன் படம் மெகா ஹிட்டடித்த நிலையில் இந்த புதிய படத்தை பான் – … Read more