‛நான் மகிழ்ச்சியான அம்மா': கண்களால் காதல் பேசும் காஜல்

தமிழ் திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக சில ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தவர் காஜல் அகர்வால். திருமணம் என்ற இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அதே அழகு, ஆர்வத்தோடு! காலங்களில் வசந்தமாய் கண்களால் காதல் பேசும் காஜல் அளித்த பேட்டி… திருமண வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்குரொம்ப நல்லா போயிட்டு இருக்கு . அன்பான கணவர்.. குழந்தை… நிறைய பொறுப்புணர்வு இப்போ இருக்கு. எல்லா மொழிகளிலும் நடிச்சிருக்கிங்க. தமிழ் ரசிகர்கள் பற்றி…என்னொட பெஸ்ட் படங்கள், பிடித்த படங்கள் தமிழில் … Read more

Leo: சொன்னதை செய்து காட்டிய லோகேஷ்..லியோ படத்திலிருந்து வெளியான மாபெரும் அப்டேட் இதோ..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். இதன் பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயக்கி வருகின்றார். Leo: லியோ படப்பிடிப்பில் நடப்பதெல்லாம் பார்த்த … Read more

பீஸ்ட் பட வில்லன் நடிகரின் மனக்காயத்துக்கு மருந்து பூசிய நானி

தெலுங்கில் நானி நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கும் படம் தசரா. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, கதையின் நாயகனாக என வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் … Read more

படத்திலும் இல்லை..நிஜத்திலும் இல்லை..விரக்தியில் பேசிய சிம்பு..!

தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நடிகர் தான் சிம்பு. எப்போதும் இவரை சுற்றி சர்ச்சையும் பரபரப்பும் இருந்து வரும். ஆனால் சமீபகாலமாக சிம்பு புது வெர்ஷனுக்கு மாறியுள்ளார் என்றே சொல்லலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வரும் சிம்பு திரைவாழ்க்கையிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி … Read more

மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பிய பஹத் பாசில்

மலையாள நடிகர் பஹத் பாசிலின் படங்களில் அவர் சீரியஸாக நடித்தாலும் கூட பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மூலம் நகைச்சுவையை கடத்துவதில் வல்லவர். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் மாலிக், தெலுங்கில் புஷ்பா, தமிழில் விக்ரம் என தொடர்ந்து அவர் சீரியஸான கதை அம்சம் கொண்ட மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சற்று ரிலாக்ஸாக மீண்டும் தனது நகைச்சுவை முகத்தை ரசிகர்களுக்கு காட்ட தயாராகி … Read more

சக நடிகையை ட்விட்டரில் பிளாக் செய்த அல்லு அர்ஜூன்? – நடிகை கொடுத்த விளக்கம்!

தன்னுடன் நடித்த சக நடிகையை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ட்விட்டரில் பிளாக் செய்ததாக நடிகை பானு ஸ்ரீ மேஹ்ரா ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்தது சர்ச்சையானது. இந்நிலையில், மீண்டும் அவரை ட்விட்டரில் பின் தொடர அனுமதி அளித்ததற்கு அல்லு அர்ஜுனுக்கு, நடிகை பானுஸ்ரீ நன்றி தெரிவித்துள்ளார். ‘அல வைகுந்தபுரம்லோ’ படத்திற்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா – 1’ திரைப்படம் அவரை பான் இந்தியா நடிகர் அஸ்தஸ்துக்கு உயர்த்தி பிடித்தது. … Read more

அயோக்யா இயக்குனருடன் கைகோர்க்கும் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தற்போது அவர் பிஸியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அதிகாரம், ஜிகர்தண்டா-2 படங்களிலும் நடிக்கவுள்ளார். புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருக்கிறார் லாரன்ஸ். இந்நிலையில் அயோக்யா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை தனக்கு பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் . இந்த படத்தை முண்ணனி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது … Read more

”நீங்க பண்ணதெல்லாம் போதும்; இனி நான் பாத்துக்கிறேன்”- ஃபேன்ஸ் முன் உணர்ச்சிவசப்பட்ட சிம்பு

கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. இதில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற நம்ம சத்தம் மற்றும் நினைவிருக்கா ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் நேற்று சென்னை … Read more

வெற்றி பாதையை நோக்கி நகர்வாரா விக்ரம்?

நடிகர் விக்ரம் தான் தேர்ந்தெடுக்கும் கதைக்கேற்ற மாதிரி அவரின் உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடிப்பதில் மிகவும் திறமையானவர். கடந்த சில வருடங்களாக இவர் தனியாக கதாநாயகனாக நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோப்ரா. அந்த படமும் தோல்வி ஆனது. தற்போது அவரது நடிப்பில் வெளி வர வேண்டிய படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என உறுதியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் … Read more

”இந்த பாட்டை அவர்தான் பாடியிருக்கணும்.. வேறு வழியில்லாம” – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ARR!

சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் விழாவின் நாயகனான பத்து தல படத்துக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் என பலரும் பங்கேற்றிருந்தார்கள். இந்த படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விழாவின் போது நடிகர் சிம்பு … Read more