இறுதி கட்டத்தில் 'கஸ்டடி'

வெங்கட்பிரபு இயக்கி வரும் நேரடி தெலுங்கு படம் 'கஸ்டடி'. இந்த படம் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ப்ரியாமணி , அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் என்னாகும் என்பதுதான் கஸ்டடி படத்தின் ஒருவரிக்கதை என்கிறார்கள். தற்போது … Read more

மலையாள படம் ரிலீஸ் தாமதம் நிவின் பாலி – தயாரிப்பாளர் மோதல்

சென்னை: நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் துறமுகம். இப்படத்தை கம்மட்டி பாடம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் ரவி இயக்கியிருக்கிறார். 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த படம் பல்வேறு …

12 வேடங்களில் நடிக்கும் சேத்தன் சீனு

'கருங்காலி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பிஎம்கே இண்டர்நேஷனல் மற்றும் சிசி புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'பீஷ்ம பருவம்'படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் … Read more

பார்லியில்., திரையிடப்படும் ஆஸ்கர் விருதை வென்ற இந்திய படங்கள்?

திரையுலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டு இந்திய படைப்புகளை பார்லிமென்ட்டில் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது : இரண்டு படங்களின் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை கவுரவிக்கும் திட்டமும் உள்ளது. ஆர்ஆர்ஆர் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் பார்லிமென்ட்டில் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் … Read more

தபாங் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? – சோனு சூட் புதிய தகவல்

கடந்த 2010ல் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் தபாங். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சல்மான்கானின் மார்க்கெட் இன்னும் கமர்சியலாக உருவெடுத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் சோனு சூட். படத்தில் அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. அதேசமயம் அந்த படத்தின் கதை தன்னிடம் வந்தபோது அதில் தனது கதாபாத்திரம் குறித்து கேட்டதுமே அந்த படத்தில் நடிக்க முடியாது என முதலில் மறுத்துவிட்டாராம் சோனு சூட். காரணம் அந்த கதாபாத்திரம் … Read more

முதன் முறையாக தனி இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்

இசை அமைப்பாளர்கள் மேடை இசை நிகழ்ச்சி நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என பலரும் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஹாரிஸ் ஜெயராஜும், வித்யாசாகரும் இசை நிகழ்ச்சி நடத்த கிளம்பி விட்டார்கள். இந்த நிலையில் ஜி.வி.பிரகாசும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். முதன் முறையாக தனது தனி மேடை இசை நிகழ்ச்சியை கோவையில் வருகிற மே மாதம் 27ம் தேதி அரங்கேற்றுகிறார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கான … Read more

Leo, Vijay: ஒண்ணுல்ல… ரெண்டுல்ல… மொத்தம் 30… லியோவில் கலக்க போகும் விஜய்!

லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. லியோமாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ​ ஐஸ்வர்யாவின் இந்த வெறித்தனத்துக்கு காரணம் … Read more

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்து பரவும் தகவல் – ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

நீண்ட நாள் கிடப்பில் இருந்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகும் தேதி என்ற பெயரில் ஒரு தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த … Read more

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கீரவாணியின் கார்பென்டர்ஸ் வார்த்தை

தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார். அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது … Read more

நடிகை அனன்யா பாண்டேவின் ‘புகை’ப்படத்தை கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்! என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, உறவினரின் திருமண விழாவில் சிகரெட் பிடித்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இவர், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, பதி பட்னி அவுர் வோ என்கிற படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுக்கும் சிறந்த பிலிம்பேர் விருதை அனன்யா வென்றார். இதைத் தொடர்ந்து, பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான ‘லைகர்’ படத்தில் … Read more