லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகலா? – புதிய விளக்கம்!!

லியோ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு நடிகையின் தாய் விளக்கம் அளித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அண்மையில் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது. அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் … Read more

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்க தயாராகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன் பட பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் ஆன்மிகத்தில் அதிக பற்று கொண்ட ஐஸ்வர்யா, திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

மம்முட்டி நடித்துள்ள கிறிஸ்டோபர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மிகுந்து எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் தான் கிறிஸ்டோபர். இதில் அமலா பால், வினய், சரத்குமார், சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி  போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் வினய் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். கிறிஸ்டோபர் கேரள காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார், அவர் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு முன்பே என்கவுண்டர் செய்வதில்புகழ் பெற்றவர். இதனால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.  … Read more

நான்கே மாதங்கள்… பரபரக்கும் அஜித் 62

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் துணிவு படத்துக்கு இணையான ஆக்சன் காட்சிகள் இல்லாததால் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் அஜித்குமார். அதோடு மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு அதிரடி கண்டிஷனும் … Read more

ரஜினிகாந்தின் ஜெய்லர் சூட்டிங்கில் 2 மெகா ஸ்டார்கள்..! சுட சுட வெளியான அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெய்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே சில ஷெட்யூல்களில் நடித்து முடித்த ரஜினிகாந்த், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அண்மையில் சென்னையில் இருந்து ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.  இந்த ஷெட்யூலில் ரஜினிகாந்துடன் ஜாக்கி ஷெராஃப் மற்றும் மோகன்லால் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் … Read more

போலீசாக நடிக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக அவர் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் … Read more

Pooja Ramachandran: பொண்டாட்டிக்கு வளைக்காப்பு..பொண்ணா ? பையனா? பூரிப்பில் 'வேம்புலி' ஜான் கோக்கேன்!

பிரபல நடிகையான பூஜா ராமச்சந்திரனின் வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பூஜா ராமச்சந்திரன்எஸ்எஸ் மியூஸிக் சேனலில் பிரபல விஜேவாக இருந்தவர் பூஜா ராமச்சந்திரன். விஜேவாக இருந்த போதே தன்னுடன் சக விஜேவாக இருந்த கிரேக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை 7 ஆண்டுகளில் முறிந்தது. 2017 ஆம் ஆண்டு காதல் கணவர் கிரேக்கை விவாகரத்து செய்தார் பூஜா ராமச்சந்திரன்.​ Aishwariyaa Bhaskaran: விவாகரத்துக்கு பிறகு வேறொருவருடன் ரிலேஷன்ஷிப்பில் … Read more

தமிழ் சினிமாவை மிரட்டிய டாப் 10 வில்லன்கள்!

சினிமாவை பொறுத்த வரை ஒரு ஹீரோ மாஸாக தெரிய வேண்டுமென்றால்  அதற்கு ஏற்ற மாதிரியான பவர்ஃபுல்லான ஒரு  வில்லன் தேவை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கும் வில்லன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.Top 10 என்றதும் இவர்களுக்கு இந்த இடம் இவர்களுக்கு  அந்த இடம் என்று சொல்ல போவது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் எல்லா வில்லன்களுமே ரொம்ப பவர்ஃபுல் தான் அது யார் யார் என்பது பற்றி தற்போது … Read more

'அண்ணனுடன் ராப் ஸ்டைலில்…' – பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபுதேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் ‘3’, கௌதம் கார்த்தி நடிப்பில் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். அதன்பிறகு வெகு நாட்களாக சினிமாவில் ஆர்வம் காட்டாத நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய ‘முசாபிர்’ ஆல்பம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக ‘லால் சலாம்’ படத்தினை இயக்க உள்ளார். … Read more

ரசிகர்களை சந்தித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ் , விழா முடிந்ததும் தனது அனைத்து மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் . இந்த வீடியோ தற்போது வெளியாகி … Read more