"கோல்டன் குளோப் கிடைக்கும் என்று கீரவாணி சார் எதிர்பார்க்கவில்லை; ஏனென்றால்…" – மதன் கார்க்கி

ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதான ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டியிருக்கிறது ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல். உலக லெவலில் ஹிட்டடித்த இப்பாடலை, தமிழில் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். “‘நாட்டு நாட்டு’ பாடலின் சூழலை இசையமைப்பாளர் கீரவாணி சார் விளக்கியபோது, ‘ஹீரோ, வில்லன், காதல், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாடலுக்குள் … Read more

அறுவடை நாள்: `சின்னதம்பி', `மின்சார கனவு' படங்களின் முன்னோடி; ஆனால் இளையராஜாவின் அந்தப் பாடல்..!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `அறுவடை நாள்’. இந்தத் திரைப்படத்தை இன்றளவும் பல ரசிகர்கள் நினைவுகூர்வதற்கு ஒரு பாடல்தான் முக்கியமான காரணம். ஆம், ராஜாவின் இசையில் உருவான அதி அற்புதமான பாடல்களில் ஒன்றான ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ என்பதின் வழியாகத்தான் ‘அறுவடை நாள்’ படத்தைப் பலரும் இன்று நினைவு கொள்வார்கள். ‘இறைஞ்சுதல்’ என்கிற உணர்வை இசையாகவும் குரலாகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பாடல் … Read more

சந்தானத்தின் ‛வடக்குப்பட்டி ராமசாமி'

காமெடி நடிகராக இருந்த சந்தானம் 2015ல் ஹீரோவாக மாறி தொடர்ச்சியாக ஹீரோவாக பயணித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் கிக் படம் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன் இதன் டிரைலர் வெளியானது. இதுஒருபுறம் இருக்க மீண்டும் காமெடி வேடம் ஏற்கவும் அவர் தயாராகி வருகிறார். அஜித்தின் 62வது படத்திலும், சுந்தர் சியின் அரண்மனை 4 படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more

Vijay 67: "இன்னும் 10 நாள்கள்தான்!" – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

கோவை துடியலூர் பகுதியில் வருமானவரித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் கட்டும் வரி எங்கே செல்கிறது என்று தெரிந்தால் அது சுமையாக இல்லாமல், மகிழ்ச்சியாக இருக்கும். அதுதொடர்பான அதிக விழிப்புணர்வை வருமானவரித்துறை செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார். லோகேஷ் கனகராஜ் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “சினிமாவில் எல்லா படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது … Read more

யு டியுபில் புதிய சாதனை படைத்த பின்னணி பாடகி அல்கா யாக்னிக்

பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக். 2022ம் ஆண்டில் யு டியுபில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல்களில் அவரது பாடல்கள் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அவர் பாடிய பாடல்கள் 15.3 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 42 மில்லியன்கள். 56 வயதான அல்கா யாக்னின் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். 2020ம் ஆண்டில் 16.6 பில்லியன், 2021ம் ஆண்டில் 17 பில்லியன் சாதனைகளை படைத்துள்ளார். … Read more

Varisu: “துணிவு படத்திலும் நான் தான் வில்லனாக நடித்திருக்க வேண்டியது; ஆனால்… !" – ஷாம் நேர்காணல்

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் சரத்குமாரின் மகன் அஜய் ஆக ஸ்கோர் செய்த மகிழ்ச்சியில் புன்னகைக்கிறார் ஷாம். அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். நம்மிடையே ‘வாரிசு’ படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். விஜய், ஷாம் ”ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இருபது வருஷத்துக்கு முன்னாடி விஜய் சாரோட `குஷி’யில் ஒரு சின்ன சீன்ல நடிச்சிருப்பேன். இப்ப படம் முழுவதும் வந்திருக்கேன். சரத் சார், பிரகாஷ்ராஜ் சார், பிரபு சார், ஶ்ரீகாந்த் சார்னு மல்டி ஸ்டார்ஸோடு நடிச்சிருக்கேன். விஜய் சார்கிட்ட … Read more

புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஜா சீரியல் நாயகி

நடிகை ப்ரியங்கா நல்காரி 'ரோஜா' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். ரோஜா தொடர் முடிவடைந்ததையடுத்து ப்ரியங்கா நல்காரியின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ப்ரியங்கா நல்காரி ஜீ தமிழில் 'சீதா ராமன்' என்ற புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'சீதா ராமா' என்கிற கன்னட சீரியலின் ரீமேக்காக தமிழில் உருவாகவுள்ள இந்த தொடரில் நாயகியாக ப்ரியங்கா … Read more

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

தியேட்டர் ரிலீஸ் துணிவு துணிவு H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் இந்தப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளத் திரைப்படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், பிரேம்குமார், வீரா, சிபி சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். துணிவு விமர்சனம்: வங்கிக் கொள்ளையும் அதிரடி திருப்பங்களும்… ஒற்றை Gangsta-வாக மிரட்டுகிறாரா அஜித்? வாரிசு வாரிசு வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளத் திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா … Read more

வாரிசு படத்தில் நடித்தது ஏன்? : ராஷ்மிகா சொன்ன விளக்கம்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தை அடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. இரண்டு பாடல்களில் விஜய்யுடன் நடனமாடும் ஒரு கதாநாயகியாக மட்டுமே நடித்திருந்தார். இது விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதுகுறித்து அவர் கூறுகையில், வாரிசு படத்தின் கதையைக் கேட்டபோது இரண்டு பாடல்களை தவிர பெரிதாக எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரியும். அது … Read more

"கீரவாணியை முதன்முதலில் இப்படித்தான் பார்த்தேன்…" – மலையாள நடிகர் வினித் சீனிவாசன் நெகிழ்ச்சி

ராஜமெளலியின் `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்றது. ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் எனப் பலரும் படக்குழுவினருக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணிக்கும் (கீரவாணி) தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான வினித் சீனிவாசன், இசையமைப்பாளர் மரகதமணியை முதன்முதலில் சந்தித்த தருணம் பற்றி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். வினித் சீனிவாசனின் பதிவு இது … Read more