Mayilsamy: மயில்சாமியின் இந்த மனசு யாருக்கு வரும்… ஆசை ஆசையாய் செய்த தங்கச் சங்கிலி… கடைசியில்..

மயில்சாமி ஆசை ஆசையாய் எம்ஜிஆர் டாலருடன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை யாருக்கு கொடுத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மயில்சாமிநடிகர் மயில்சாமி கடந்த 19 ஆம் தேதி காலமானார். 57 வயதான மயில்சாமி, தீவிர சிவ பக்தராக இருந்து வந்தார். கடந்த 18 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தார் மயில்சாமி. அப்போது அங்கு நடைபெற்ற ட்ரம்ஸ் சிவமணியின் கச்சேரியிலும் பங்கேற்றிருந்தார். ​ Sushmitha Sen: நடிகை சுஷ்மிதா சென்னுக்கு திடீர் … Read more

What to watch on Theatre & OTT: அயோத்தி, பஹிரா – இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

அயோத்தி (தமிழ்) அயோத்தி அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் எம்.சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது. பல்லு படாம பாத்துக்க (தமிழ்) பல்லு படாம பாத்துக்க டெம்பில் மன்கி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஷாரா, சஞ்சிதா ஷெட்டி, ஜெகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. … Read more

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

மும்பை: பாலிவுட் நடிகையும், முன்னாள் அழகியுமான சுஷ்மிதா சென், 47 திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தக்க சமயத்தில் ஆஞ்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது நலமுடன் உள்ளேன். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.சமீபத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் 'லவ் டுடே' கூட்டணி?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தை அவர் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து இவானா, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது பிரதீப் ரங்கநாதன் புதிதாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் … Read more

மலையாளத்தில் உருவாகும் 4 மொழிப்படம்

டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'மின்னல் முரளி' பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் மீண்டும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை தயாரிக்கிறார்கள். இதில் ஆண்டனி வர்க்கீஸ், ஷேன் நிகம் நாயகர்களாக நடிக்கிறார்கள். நீரஜ் மாதவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மூலம் நஹாஸ் ஹிதாயத் இயக்குநராக அறிமுகமாகிறார். அன்பறிவ் சண்டை இயக்குனர்களாக பணியாற்றும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து … Read more

அமிதாப்பச்சன், தர்மேந்திரா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் உள்ள நடிகர் அமிதாபச்சனின் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக யாரோ மர்ம நபர் நாக்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்திருக்கிறார். அதையடுத்து நாக்பூர் போலீசார் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்குள்ள போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அமிதாப்பச்சனின் வீட்டை சோதனை செய்துள்ளார்கள். ஆனால் இந்த தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லையாம். அதைபோல் நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்னொரு மர்ம போன் காலும் வந்திருக்கிறது. அங்கு … Read more

பிரபல நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு..!!

1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதன்பிறகு அவருக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதா சென், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரை சுற்றி கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. பல நடிகர்களுடன் காதல் வயப்பட்டதாக பேசப்பட்டாலும், இப்போது வரை திருமணம் … Read more

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைகிறார். 2017ம் ஆண்டு இந்த இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது . பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இப்படம் வெளியாகமல் இருந்தது. சமீபத்தில் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி பற்றி தகவல் … Read more

மீண்டும் நடிக்க வருகிறார் தனன்யா

2009ம் ஆண்டு வெளியான 'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' படத்தில் நடித்தவர் தனன்யா. இதில் சேரனின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் கதை நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு தனன்யா 'வெயிலோடு விளையாடு' என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். … Read more

கப்பலில் அகிலன் பட புரோமஷன்?

கல்யாண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அகிலன். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதையொட்டி புதுப் புது ஐடியாக்களில் புரொமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் புரொமோஷன் பிரஸ் மீட்டை நடுக்கடலில் நடத்த ஒரு கப்பல் வாடகைக்குப் பேசப்பட்டிருக்குதாம். இதனையடுத்து நாடெங்கும் … Read more