திரைக்கதை வங்கி துவக்கம்

பணத்தை போட்டு வைத்து தேவையான போது எடுத்துக் கொள்ள வங்கி இருப்பதை போன்று திரைக்கதையை பதிவு செய்து வைத்து அதனை தேவையானபோது எடுத்துக் கொள்ளவும், அல்லது தேவைப்படும் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவும் திரைக்கதை வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கியும், தயாரிப்பாளர் தனஞ்செயனும் இணைந்து உருவாக்கி உள்ளனர். இதனை பாரதிராஜா துவக்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் … Read more

Vijay, Sharukh khan, Shankar: நிஜமாவா? விஜய்.. ஷாருக் கான்.. ஷங்கர்… 900 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டம்!

விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து இயக்குநர் ஷங்கர் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் முதல் 2.o வரை அனைத்து படங்களுமே வசூலில் சாதனை படைத்துள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.o திரைப்படம்தான் வெளியானது. அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 … Read more

மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய மாளிகப்புரம் திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம்.  அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம்  பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி  வழங்கப்படுகிறது. சபரிமலை பற்றி பரிச்சயமானவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின் அருமையை … Read more

நக்கலடித்த மாணவருக்கு அட்வைஸ் உடன் பதிலடி கொடுத்த அர்ச்சனா

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனா அண்மையில் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுக்கே உண்டான துடுக்குத்தனத்துடன் சிலர் அவர் பாத்ரூம் டூர் வீடியோவை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து கிண்டலடித்தனர். அர்ச்சனா அதற்கு டென்ஷன் ஆகாமல் பொறுமையாக பதில் அளித்தார். அர்ச்சனா அந்த மாணவர்களிடத்தில், 'நான் பாத்ரூமில் எப்படி மலம் கழிக்கிறேன் என்று காண்பிக்கவில்லை. பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் காண்பித்தேன். பாத்ரூமை காட்டுவது தவறு கிடையாது. உங்கள் பாத்ரூம் … Read more

100வது நாளை தொட்டது லவ் டுடே

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி பரபரப்பான வெற்றியை பெற்ற படம் 'லவ் டுடே'. 9 கோடியில் தயாரான இந்த படம் 80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. செல்போனை மாற்றிக் கொள்வதால் காதல் ஜோடிகளுக்குள் வரும் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் உருவானது. ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார். சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் … Read more

பாலியல் புகாரை விசாரிக்க விதித்த தடை நீக்கம் : உன்னி முகுந்தனுக்கு மீண்டும் சிக்கல்

முன்னணி மலையாள நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான மாளிகப்புரம் படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இந்த படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியில் இருந்த உன்னிமுகுந்தனுக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஒரு இளம் பெண் உன்னிமுகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார். தன்னை கதை விவாதத்துக்கு வருமாறு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் வழக்கின் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நடந்போது உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் … Read more

Leo: ஒரு வேளை அப்படி இருக்குமோ? திடீரென லியோ படத்திற்கு விளம்பரம் செய்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் திடீரென லியோ படத்தை புகழ்ந்து டிவிட்டியிருப்பது வைரலாகி வருகிறது. லியோமாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ பிளடி ஸ்வீட். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் , நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் … Read more

கதை நாயகன் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் என்ற பெயர் எம்.எஸ்.பாஸ்கருக்கு உண்டு. இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'அக்கரன்' என்ற படத்தில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் … Read more

AK 62, Vignesh Shivan: கையிலேயே வெண்ணெய் இருக்கு… விக்னேஷ் சிவனின் அதிரடி திட்டம்!

ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு விக்னேஷ் சிவன் அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகே 62தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதையில் திருப்தியாகாத அஜித், கதையை மாற்றுமாறு கூறி 8 மாதம் அவகாசம் கொடுத்ததாகவும் அப்போதும் விக்னேஷ் சிவன் … Read more

முதல் மலையாள நடிகை பி.கே.ரோஸியை கவுரவித்த கூகுள்

கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் உலக புகழ்பெற்றது. அந்த பக்கத்தில் இடம்பெறும் டூடுல் மிகவும் கவனிக்கப்படும். உலகில் பல்வேறு துறையில் சிறந்தவர்களை இந்த டூடுல் மூலம் கூகுள் கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மலையாள சினிமாவின் முதல் நாயகியான பி.கே.ரோஸியின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. ரோஸியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த டூடுலை வெளியிட்டுள்ளது. யார் இந்த ரோஸி?இந்தியாவுக்குள் சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. பெண்கள் நடிக்க மாட்டார்கள். நடிக்க அனுமதியும் … Read more