அஜித் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜன., 11ல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இந்த படத்தின் பணிகள் துவங்கி உள்ளன. ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பாக அமையும். இதற்கு … Read more

'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' – ஒரே நிறுவனம், இரண்டு ஜாக்பாட்

தெலுங்குத் திரையுலகத்தில் இதற்கு முன்பு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்ததில்லை. அந்த சாதனையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த பொங்கலுக்கு படைத்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'வால்டர் வீரய்யா' படம் … Read more

என் படங்களில் ராஷ்மிகா நடிப்பாரா? – ரிஷப் ஷெட்டியின் சாமர்த்திய பதில்

கன்னடத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நுழைந்து குறுகிய காலத்தில் புகழ்பெற்று தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார். தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு நடிகை இந்த அளவிற்கு உயரம் தொட்டிருப்பது கன்னட திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றாலும் கன்னடம் குறித்து தொடர்ந்து பாரடாமுகம் காட்டிவரும் ராஷ்மிகாவின் நடவடிக்கைகளால் இதுபற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. குறிப்பாக கிரிக் பார்ட்டி படம் மூலமாக இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தான் … Read more

தெலுங்கு இயக்குனர் என்று காயப்படுத்தாதீர்கள் : வாரிசு இயக்குனர்

விஜய் நடித்த வாரிசு படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, பிரபு, சங்கீதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசை அமைத்திருந்தார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூலில் நல்ல லாபத்தை … Read more

விஜய்சேதுபதி பிறந்தநாளில் நிறைவுற்ற மெர்ரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த விஜய்சேதுபதி, தமிழை விட தற்போது இந்தியில் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். மும்பைகார், மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் கத்ரீனா கைப்புடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த … Read more

பதான் படத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் புதிய அறிவுறுத்தல்

பாலிவுட்டில் 2018ல் ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து பதான் படத்தின் மீதான … Read more

மகேஷ்பாபு படத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்த ஸ்ரீ லீலா

மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில் மகேஷ்பாபு குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகமான நிகழ்வு உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி ஜனவரி 18ல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஆகஸ்ட் 11ல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது … Read more

ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா!…..

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார். நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 – டிசம்பர் 2022 வரையில் 6 ஆயிரம் பேரிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் அடிப்படை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக … Read more

500 மில்லியனைக் கடந்த 'அரபிக்குத்து'

தமிழ்த் திரைப்படமான 'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் 1400 மில்லியன் பார்வைகளைக் கடந்து தென்னிந்திய சினிமா பாடல்களில் முதலிடத்தில் உள்ளது. இப்போதும் அந்தப் பாடலை தினமும் சில லட்சம் பேர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தெலுங்குத் திரைப்படப் பாடலான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தமன் இசையில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் 800 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்திலும், அதே படத்தில் … Read more

மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ராஷ்மிகா – மஞ்சு வாரியர் படங்கள்

சமீபத்தில் பொங்கல் வெளியீடாக கடந்த ஜன.,11ல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் வாரிசு படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். சுல்தான் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடித்துள்ள இரண்டாவது படம் இது. அதேப்போல துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அசுரன் படத்தை தொடர்ந்து அவருக்கும் தமிழில் இது இரண்டாவது படம். இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி இருவருக்கும் … Read more