புலியின் வாலை பிடித்து கேபி சேட்டை!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்த கேப்ரில்லா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் புகழ் பெற்ற கேபி சினிமாவில் ஹீரோயினாக கமிட்டாவார் என்றே அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு தான். தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' தொடரில் நடித்து வரும் கேபி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கலக்கி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாவிலும் போட்டோஷூட், ரீல்ஸ் என … Read more

மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

கடந்த ஆண்டு நடிகை ஸ்ருதி ஹாசன், மனநலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் அவற்றை சரி செய்வது எளிதான விவகாரம் அல்ல என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அண்மையில், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை. அது அவரது மனநல பிரச்னைகள் குறித்த பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. தனது மனநலம் குறித்த செய்திகளை கடுமையாக சாடிய அவர், தாம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுதான் … Read more

”இப்படி ஆகும்னு நினைக்கல”.. அர்ஜூன் தாஸ் உடனான போட்டோ குறித்து ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம்!

நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததால் எழுந்த கருத்துக்களுக்கு, நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக பதிலளித்துள்ளார். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. தமிழில் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்திலும், … Read more

கோட்சேவை சந்திக்கும் காந்தி : அடுத்து வரும் சர்ச்சை படம்

ஹிந்தியில் புதிதாக தயாராகி உள்ள படம் காந்தி கோட்சே : ஏக் யுத். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளது. கமல் தயாரித்து நடித்த ஹே ராம் படமும் அதில் ஒன்று. இந்த படம் வித்தியாசமானது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் காந்தி உயிர் பிழைத்துக் கொள்கிறார். பின்னர் அவர் சிறையில் இருக்கும் கோட்சேவை சந்திக்கிறார். காந்தி – கோட்சே இடையிலான யுத்தமும், சுதந்திர இந்தியாவில் காந்தி எதிர்கொள்ளும் புதிரான சவால்களுமே இந்த … Read more

அடிதடி வழக்கில் தலைமறைவான பிரபல விஜே!!

யூடியூபில் நடிகைகளை பேட்டியெடுத்து பிரபலமான தொகுப்பாளர் நிக்கி என்கிற நிக்கிலேஷ், தனியார் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் அலுவலகத்தில் பணியாற்றிவரும் ராஜேஷ் என்பவருக்கும், நிக்கிலேஷூக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் சாரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் தொகுப்பாளர் நிக்கிலேஷின் முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. மற்றொரு நபரான ராஜேஷுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை … Read more

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்: ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழனின் திரைப்படம்

நியூடெல்லி: ஆர். மாதவனுடைய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.  குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட … Read more

அளவுக்கு மீறிய கொண்டாட்டம்! பாலகிருஷ்ணா படக் காட்சியின்போது திடீரென பற்றி எரிந்த ஸ்கிரீன்!

பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ பட திரையிடலின்போது, ரசிகர்கள் சிலர் திரைக்கு தீ வைத்ததாக பரவி வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஹனி ரோஸ், ஸ்ருதிஹான், வரலக்ஷமி சரத்குமார், துனியா விஜய், லால் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளில் 35 … Read more

பிக்பாஸிருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு அமோக வரவேற்பு

பிக்பாஸ் சீசன் 6ல் அதிகம் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. இறுதிப்போட்டிவரை நிச்சயமாக செல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்லிக்கொள்ளும் வகையில் கேமை விளையாடவில்லை. அழகுபதுமையாக வெகேஷனுக்கு சென்றது போல் பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்து பலரும் விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது பலரின் விமர்சனமாக இருந்தது. இறுதியில், கடந்தவார எவிக்ஷனில் வெளியேறினார். இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து … Read more

நள்ளிரவில் ஹோட்டல் அறைக்கே ரசிகர்களை வரவழைத்து சந்தித்த ஷாருக்கான்

பாலிவுட் திரையுலகை பொருத்தவரை ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என மூன்று கான் நடிகர்கள் தான் உச்சத்தில் இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை கொண்டவராக இருப்பவர் ஷாருக்கான் தான். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் இவர் தற்போது பதான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பேஷ்ரங் என்கிற பாடல் காட்சியால் சர்ச்சைக்கு ஆளானது. வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. … Read more