“5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்” – யாருக்கு டிரெண்ட் செய்கிறார்கள் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்துளள 'வாரிசு' படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்திற்கான ரசிகர்களின் சிறப்புக் காட்சிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அஜித் நடித்த 'துணிவு' படத்திற்கு அதற்கு முன்பாக நள்ளிரவு 1 மணிக்கு வழங்கப்பட்டு காட்சிகள் நடந்தன. 'வாரிசு' படத்திற்கு முன்பாக 'துணிவு' படத்திற்கு சிறப்புக் காட்சிகள் நடைபெற்றதால் 'துணிவு' படம் பற்றிய ரசிகர்களின் பாசிட்டிவ்வான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. அது 'வாரிசு' படத்திற்கு மைனஸ் ஆக … Read more

புதிய காதல் ஜோடி – அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்ய லெட்சுமி

'பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி. அவர் 'கைதி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸைக் காதலிப்பது பற்றி நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிவித்துள்ளார். அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை 'ஹாட்டின்' எமோஜியுடன் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லெட்சுமி. அர்ஜுன் தாஸ் எம்பிஏ படித்துள்ளவர், ஐஸ்வர்ய லெட்சுமி எம்பிபிஎஸ் படித்துள்ளவர். இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. அப்படியிருக்கும் போது இருவரும் எங்கு சந்தித்தார்கள், எப்போது காதலிக்க … Read more

தமிழ்நாட்டில் ‘வலிமை’, ‘பீஸ்ட்’ ரெக்கார்டை முறியடிக்காத ‘துணிவு’ Vs ‘வாரிசு’ -என்ன காரணம்?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஒரேநாளில் அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியான நிலையில், தனது முந்தையப் படங்களின் ஓப்பனிங் வசூலை இரு நடிகர்களுமே முறியடிக்கவில்லை. இதுகுறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். வலிமை Vs துணிவு: ‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் எச். வினோத் மற்றும் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருந்தப் படம்தான் ‘வலிமை’. வேறு நடிகர்களின் போட்டியின்றி சோலாவாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ. 200 … Read more

உயிர்பலி, தேவையற்ற மோதல்கள்… : அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்குமா அரசு? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் அதிகாலை காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாலை 4 மணிக்கு, 5 மணிக்கு அந்த காட்சிகள் ரசிகர்களுக்கான காட்சிகள் என்ற பெயரில் 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணங்களை வசூலித்து நடத்தப்படுகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன. மோதல் சம்பவம்சில சமயங்களில் அதிகாலை காட்சிகளுக்கு பதிலாக நள்ளிரவு காட்சிகளும் … Read more

துணிவு Vs வாரிசு முதல் நாள் வசூல் நிலவரம் – தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் இவர்தான் டாப்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் வழக்கம்போல் அஜித்தின் படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய் திரைப்படம் டாப்பில் உள்ளது. தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு, இவர்கள் இருவரின் படங்களும் நேரடியாக மோதாமல் இருந்தன. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் … Read more

இன்று ஐதராபாத்தில் 'வாரசுடு' பிரஸ்மீட், விஜய் போவாரா ?

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துளள 'வாரிசு' படம் தமிழில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் முன்பதிவு சிறப்பாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரஸ்மீட் இன்று(ஜன., 12) மாலை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் விஜய் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து இதுவரையில் தெலுங்கில் டப்பிங் … Read more

சமந்தாவுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்த வருண் தவான்

சமந்தா நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் என்கிற திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சில மாதங்களாகவே மையோசிடிஸ் எனும் தசை நார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் இருந்து வந்தார். அதனால் சாகுந்தலம் பட விழாவிலும் அவர் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சமந்தா கண் … Read more

Jigarthanda 2: தீவிரமடையும் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங்

பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் மதுரையை மையமாக வைத்து வந்த தமிழ் சினிமாக்களில் ஜிகர்தண்டா தனித்து தெரிந்தது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்பாராஜின் … Read more

16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் என பலரது நடிப்பில் உருவான குரு படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது. 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்தியில் உருவானாலும் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு குரு திரைப்படம் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை கருவாக கொண்டதுதான் குரு படம் என தெரிவிக்கப்பட்டாலும் அதனை மறுத்ததோடு, முழுக்க முழுக்க கற்பனையான கதைதான் குரு என்றும் மணிரத்னம் … Read more