பிரபல மலையாள இயக்குனர் படத்தில் சூர்யா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசெரி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து படம் இயக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் 2019ம் ஆண்டு வெளியான ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் மூலமாக மேலும் பிரபலமாகி இருக்கிறார்.  இந்த படத்திற்கு மட்டுமின்றி இவர் தனது பல படைப்புகளுக்கும் கேரளா அரசின் மாநில விருதுகள் போன்ற பல விருதுகளை பெற்று இருக்கிறார்.  லிஜோ … Read more

Varisu: வாரிசு வெற்றி கொண்டாட்டத்தின் பிண்ண்னி..இதுதான் உண்மையான காரணமா ?

விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் உருவான வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது. வம்சியின் இயக்கம், நாயகியாக ராஷ்மிகா ,இசையமைப்பாளராக தமன் என விஜய் இம்முறை முற்றிலும் புதுமையான கூட்டணியுடன் களமிறங்கினார். மேலும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது இது விஜய் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என தகவல்கள் வந்தது. இதெல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது. இதைத்தொடர்ந்து வாரிசு படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக படத்தின் … Read more

சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்

இயக்குனர் முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து 2020ல் தர்பார் படத்தை இயக்கினார். இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் விஜய் மறுத்துவிட்டார். இதன்பின் அவரின் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில நடிகர்களுடன் இணைவதாக செய்திகள் மட்டுமே வந்தன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்க உள்ளாராம். ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் வந்தபோதிலும் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் … Read more

அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர் சஸ்பெண்ட் : மன்னிப்பு கேட்டது மாணவர் சங்கம்

கொச்சி சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது மேடையேறிய மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோளில் கைபோட முயன்றார். அவரிடமிருந்து நழுவிய அபர்ணா அந்த மாணவரின் அத்துமீறலை அந்த இடத்திலேயே கண்டித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலை தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அபர்ணா … Read more

விஜய் ஆண்டனியின் உடல்நிலை ; வதந்திகளை நம்ப வேண்டாம் : சுசீந்திரன்

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். அதையடுத்து மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை வந்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி … Read more

காலில் காயம் ஏற்பட்டது எப்படி? – ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவுக்கு சில தினங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனக்கு அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நடந்த கபடி போட்டி ஒன்றில் சிங்கப்பெண்கள் என்ற அணியில் தான் இடம்பெற்றதாகவும், அந்த கபடி விளையாட்டின் போது தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கபடி விளையாடிய போது … Read more

”வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வனை எடுத்துள்ளார்கள்”- நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது … Read more

வடிவேலு டயலாக்கில் பதிலடி தந்த பிரியா பவானி சங்கர்

தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், சினிமாவில் இன்று வளர்ந்து வரும் நடிகையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பணத்துக்காக மட்டுமே நடிக்க வந்ததாக அவரே கூறியது போல் இணையதளங்களில் செய்திகள் பரவி சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து பதிவிட்டுள்ள ப்ரியா பவானி சங்கர், 'மாப்ள சொம்ப கொடுத்தா தான் தாலி கட்டுவாறாம் என்கிற மோடில் ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. முதலில் நான் கூறியதாக வெளிவந்த 'ஸ்டேமெண்ட் சர்ச்சை' குறித்து பேச … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மனோஜ் மஞ்சு

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் இளைய மகன் மனோஜ் மஞ்சு. இவரது அண்ணன் விஷ்ணு மஞ்சுவும், அக்கா லட்சுமி மஞ்சுவும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இவரும் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது வாட் தி பிஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சிக்ஸ்த் சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் வருண் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக … Read more

கமல்ஹாசன், அமிதாப்பச்சன் தான் இந்திய சினிமா – ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார். “இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. … Read more