விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ்

ஐடி ஊழியரான வினுஷா தேவி மாடலிங்கில் நுழைந்து பிரபலமானதை தொடர்ந்து சின்னத்திரை, சினிமா அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் மாடலிங்கையும் விடாமல் அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் விண்டேஜ் ஸ்டைல் தீமுடன் சில புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதற்கான இன்ஸ்பரேஷன் தனது அம்மாவின் பழைய புகைப்படத்திலிருந்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார். பேக்ரவுண்டு, கலர் டோன் என 80-களை நினைவுப்படுத்தும் அந்த போட்டோஷூட்டின் ஒரு புகைப்படத்தில் சராசரி குடும்பத்து பெண் அந்த காலத்தில் … Read more

கடவுளுக்கே பெருமை : மாதவன் நெகிழ்ச்சி பதிவு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கி, தயாரித்து நடித்து கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ராக்கெட்ரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. அவரது வேடத்தில் நடித்து, இயக்கவும் செய்திருந்தார் மாதவன். இந்த படத்தின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்த போதும் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாறியது. அதோடு ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பட்டியலிலும் ராக்கெட்ரி படமும் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து … Read more

காலில் கட்டுடன் ஆல்யா மானசா

பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று நேற்றைய தினம் இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஆல்யா கூறுகையில், 'எதிர்பாராத விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. எனினும் சிறிது சிறிதாக குணமாகிறது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். அவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததன் காரணமாக அதிகரித்த உடல் எடையை கடுமையான பயிற்சிகளை செய்து குறைத்த ஆல்யா தற்போது 'இனியா' சீரியலின் … Read more

thunivu vs varisu: தல -தளபதி இதுவரை நேருக்கு நேர் மோதிய படங்களின் பட்டியல் இதோ!

திரையுலகில் பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாவது வழக்கம். மற்ற சாதாரண நாட்களில் வெளியானாலும் ஒரு நடிகரின் படம் வெளியாகும்போது மற்றொரு முன்னணி நடிகரின் படம் வெளியாகாது என்று சொல்லாம். ஆனால் சில சமயங்களில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிப்பதும் உண்டு. சிவாஜி -எம்ஜிஆர், ரஜினி -கமல் காலத்தில் தொடங்கிய இந்த ட்ரெண்ட் தற்போது அஜித் -விஜய் -காலத்திலும் தொடர்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, இரு முன்னணி … Read more

தவறாக பேசும் நெட்டிசன்களை ப்ளாக் செய்து தூக்கிய நீலிமா

திரைப்படம் மற்றும் சீரியல் நடிகையான நீலிமா இசை திருமணத்திற்கு பின் பொறுப்பான குடும்ப பெண்ணாக வாழ்க்கை நடத்தி வருகிறார். சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திறம்பட நிர்வகித்து வருவதுடன் அவ்வப்போது சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக தனது குடும்ப புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். பொதுவாக நடிகைகளை பின்தொடரும் சில நெட்டிசன்கள் அவர்கள் அழகை மிகவும் ஆபாசமாக வர்ணித்தும் அவருக்கு எதிராக பல நெகட்டிவான கருத்துகளையும் கூறிவருவது வழக்கம். … Read more

குழந்தை நட்சத்திரம்… இப்போது சீரியல் நடிகர் : ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

'எதிர்நீச்சல்' தொடரில் அண்மையில் அருண் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சாணக்யன். முன்னதாக ஜீ தமிழின் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' தொடரில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இவரை பார்க்கும் நேயர்கள் பலரும் இவரை எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. சாணக்யன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக … Read more

துணிவு விமர்சனம்: வங்கிக் கொள்ளையும் அதிரடி திருப்பங்களும்… ஒற்றை Gangsta-வாக மிரட்டுகிறாரா அஜித்?

பங்குச் சந்தையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செய்த பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல், நாட்டையே பரபரப்பு ஆக்குகிறது. மறுபுறம், சென்னையில் உள்ள ஒரு பெரிய வங்கியைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டி நுழைகிறது. இவர்களுக்கு முன்பே அந்த வங்கியைக் கொள்ளையடிக்க அங்கே வீற்றிருக்கிறார் அஜித் குமார். இந்த கொள்ளையைக் கையில் எடுப்பவர் அதை வெற்றிகரமாக முடிக்கிறாரா, கொள்ளையடிக்கக் காரணம் என்ன, பங்குச் சந்தை ஊழலுக்கும் இந்தக் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகளுக்கு ரேஸ் … Read more

"இப்போ நினைச்சாலும் என் முட்டி தள்ளாடுது…! RRR செட்ல ராஜமௌலி அடிப்பார்"-கலகலத்த ராம்சரண்

இந்திய நேரப்படி, இன்று காலை கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் RRR திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருது கிடைத்தது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தியாவே பெருமை கொள்ளும் தருணமாக அது அமைந்தது. விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். … Read more

துணிவு பட கொண்டாட்டத்தில் விபரீதம் : ரசிகர் பலி

சென்னை : சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில் இன்று (ஜன.,11) வெளியான நடிகர் அஜித் நடித்த ‛துணிவு' படம் திரையிடப்பட்டது. அப்போது அதிகாலையில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்து, மேளதாளம் இசைத்து கொண்டாடினர். அப்போது பரத்குமார் (வயது 19) என்ற அஜித் ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மீது ஏறி நடனமாடியுள்ளார். இதில், கீழே தடுமாறி விழுந்ததில் முதுகு தண்டில் பலத்த காயம் … Read more

ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி… மகிழ்ச்சியில் மாதவன் போட்ட போஸ்ட்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வந்திருந்தார் நடிகர் மாதவன். விஞ்ஞானியான நம்பி நாராயணன், நாசா வேலையை உதறியபின், நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டதை மையமாக வைத்து இப்படத்தை நடிகர் மாதவன் எழுதி, இயக்கி நம்பி நாராயணனான நடிக்கவும் செய்திருந்தார். படத்தின் மீது பலதரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்தையும் கடந்து இந்திய சினிமாவில் முக்கிய படமாக மாறியது. இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி படம் … Read more