9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மோதிய விஜய், அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நாளை ஜனவரி 11ம் தேதி நேரடியாக மோதுகிறார்கள். விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' படங்கள் நாளை வெளியாகின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்பு 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இருவரது படங்களும் ஜனவரி 10ம் தேதி வெளியானது. விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவந்தது. இப்போது இருப்பதை விட … Read more

மர்ம நபர்கள் செய்த துணிவான சம்பவம் – பட டிக்கெட்டுகள் திருட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ஏகப்பட்டோர் ரசிகர்களாக இருக்கின்றனர். இரண்டு பேரின் பட வியாபாரமும் பல நூறு கோடிகளில் நடப்பவை. எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித்தும், வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய்யும் நடித்திருக்கின்றனர்.இரண்டு படங்களில் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இரண்டு படங்களும் நாளை ரிலீஸாகின்றன. சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு … Read more

பொன்னியின் செல்வனில் வாய்ப்பு கிடைக்கவில்லையே: வசுந்தரா வருத்தம்

வட்டாரம் படத்தில் அறிமுகமானர் அதிசயா. பின்னர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து என்சிசி மாணவிகளில் ஒருவராக நடித்து அடையாளம் பெற்றார். பின்னர் தனது இயற்பெயராக வசுந்தரா காஷ்யப் என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்தார். விஜய்சேதுபதி நடித்த முதல் படமான தென்மேற்கு பருவக்காற்றில் அவரது ஜோடியாக நடித்தார். பின்னர் கண்ணே கலைமானே, பக்ரீத் உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது புத்தன் இயேசு காந்தி, கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல், படங்களில் நடித்து வருகிறார். தான் நடிக்கும் … Read more

கனல் கண்ணன் விவகாரம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை மதுரவாயலில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது பெரியார் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சென்னை … Read more

சாகுந்தலம் : சமந்தாவின் தோழியாக அதிதி பாலன்

அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி … Read more

அண்ணா இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா – தமன் உருக்கம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு.தில்ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் வாரிசுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. படத்தின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி படம் முழுக்க தெலுங்கு வாடை அடிக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக ஒரு தரப்பினரும், ட்ரெய்லரில் விஜய் பக்காவாக இருக்கிறார். படம் பக்கா ஃபேமிலி பேக்கஜாகவும், … Read more

Oscars 2023: RRR, Kantara, The Kashmir Files – பரிந்துரைக்கான தகுதிப் பட்டியலில் இந்தியப் படங்கள்!

உயரிய விருதாகக் கருதப்படும் ‘தி அகாடமி அவார்ட்ஸ்’ எனப்படும் ஆஸ்கர் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப் பட்டியலுக்காக (Eligible List) தேர்வு செய்யப்பட்டுள்ள 301 படங்களின் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி விவேக் அக்னிஹோத்திரி இயக்கி சர்ச்சையைக் கிளப்பிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படமும், பார்த்திபனின் … Read more

”தமிழ்நாடு தானே சரி; விஜய், அஜித் ரசிகர்கள் இரண்டையும் பார்ப்பாங்க” – எச்.வினோத் நேர்காணல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகிறது. புதிய தலைமுறைக்கு இயக்குநர் எச்.வினோத் அளித்த நேர்காணலின் முழுவிபரம்:- துணிவு பட இயக்குனர் திரு H.வினோத் அவர்களுடன் ஒரு நேர்காணல். எங்கு காணிலும் சூரியன் என்பது போல் எங்கு பார்த்தாலும் துணிவு வினோத் பற்றிய செய்தியாக இருக்கிறதே? படம் வெளியாக போகிற இத்தருணத்தில் உங்களுக்கு பதற்றமாக உள்ளதா?? கண்டிப்பாக. அனைவருக்குமே பதற்றம் இருக்கும். இந்த பதற்றத்தை கட்டுப்படுத்த தெரிந்த மனிதர்களாக … Read more

ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜப்பானிய மொழிகளிலும் வெளியாகிறது ஹனுமேன்

உலகின் முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது ஹனுமன் தான். புராண காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறவர். அவரை நிகழ்கால சூப்பர் ஹீரோவாக சித்தரித்து உருவாகும் படம் ஹனு மேன். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படத்தில் தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்கிறார். வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட் அப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, கவுர ஹரி, அனுதீப் தேவ், … Read more

‘வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை.. முதல்வரிடம் ரசிகர்கள் முறையீடு..!

‘வாரிசு’ படத்துக்கு டிக்கெட் வழங்க தியேட்டர்கள் மறுத்ததால் சட்டப்பேரவைக்கு வந்து முதல்வரை சந்தித்து விஜய் ரசிகர்கள் முறையிட்டனர். இதையடுத்து, ஆட்சியரை அழைத்துப் பேசி கடந்த முறை போல் செயல்பட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை முன்பாக விஜய் நற்பணி இயக்கத்தினர் இன்று திரண்டனர். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பத்து நிர்வாகிகளை முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தியேட்டர்களில் வாரிசு படத்துக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் தரவில்லை. முன்னாள், இந்நாள் … Read more