மே மாதத்திற்குள் தயாராகும் 'விஜய் 67'

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது . இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இதில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன், மனோபாலா , மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னை … Read more

"மகா பெரியவா சீரியலை அனைத்து சமூகத்தினரும் பார்க்கும்படியாக உருவாக்கியுள்ளேன்" – பாம்பே சாணக்யா

‘மகா பெரியவா’ என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி நினைவு நாளையொட்டி, வரும் ஜனவரி 7-ம் தேதி சங்கரா டிவியில் ‘மகா பெரியவா’ தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரை, இயக்கியுள்ள இயக்குநர் பாம்பே சாணக்யாவிடம் பேசினோம், “இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அக்ரஹார வாழ்க்கை முறை பற்றியும் நம் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை எடுத்துரைக்கும் ‘கர்மா’ என்றொரு சீரிஸை இயக்கியிருந்தேன். அதற்கு, யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, வியட்நாம் எனப் பல நாடுகளிலிருந்தும் … Read more

விஜய்யின் ‘வாரிசு’ ட்ரெய்லர் எப்போது, எங்கே வெளியீடு?.. ரன்னிங் டைம், சென்சார் தகவல்கள்!

விஜய்யின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த மாதம் மிகப் பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவின் தொகுப்பு நேற்று முன்தினம் தனியார் … Read more

'துணிவு' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியீடு.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் உருவாகி உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு டிரைலர் … Read more

விடுதலை படத்தின் ரிலீஸ் குறித்த விவரம்

'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர் . ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து மற்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று … Read more

காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய தமன்னா!…

நடிகை தமன்னா கோவாவில் காதலருடன் புத்தாண்டு கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். நடிகை தமன்னா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த … Read more

கவர்ச்சி மட்டும் தான் காட்டுறேனா? – வீடியோ வெளியிட்டு பதில் கொடுத்த தர்ஷா குப்தா

சின்னத்திரையில் நடிகையாக இருந்த தர்ஷா குப்தா சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானதால் இவரை கவர்ச்சி கன்னியாகவே பலரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் அவர் நடித்த 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வின் போது தர்ஷா குப்தாவை சூழ்ந்து கொண்ட சில செய்தியாளர்கள் அவரிடம் 'ஏன் அதிகமாக கிளாமர் காட்டுகிறீர்கள்?' 'கிளாமர் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா?' என்பது போல் … Read more

திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

'கேஜிஎப் 1', 'கேஜிஎப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய போவதாக தெரிவித்துள்ளார் . ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது … Read more

பிரம்மாண்டங்களை இறக்கும் கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம்! ரூ.3000 கோடி ரெடி

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில்ர “ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது … Read more

Surya 42 Exclusive : `மிரள வைக்கிறார் சூர்யா' – படக்குழு சொல்லும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

சூர்யா இப்போது ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. சென்னை, கோவா ஆகிய இடங்களைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் மீண்டும் சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை மீண்டும் ஆரம்பிக்கிறது. இது குறித்து படக்குழுவிடம் விசாரித்தேன். சிவா, சூர்யா, டி.எஸ்.பி. ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் ‘சிறுத்தை’ சிவா, முதன்முறையாக … Read more