இயக்குனராகிறார் ராதிகா ஆப்தே

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் ஏற்கெனவே படம் இயக்கி வருகிறார். அவர் வரிசையில் அடுத்து வர இருக்கிறார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் துணிச்சலான நடிகை என்று புகழ்பெற்றவர், நிர்வாணமாக கூட நடித்திருக்கிறார். தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தின் மூலம் அறிமுகமானார், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், சித்திரம்பேசுதடி 2 படங்களில் நடித்தார். தற்போது படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமா இயக்க வேண்டும் என்பற்காகத்தான் … Read more

‘பாலிவுட் வாய்ப்புக்காக இப்படி பேசலாமா?’ – சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாக்களில் மசாலா, ஐட்டம் பாடல்கள்தான் உள்ளன என்றும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ தெலுங்குத் … Read more

அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனது

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் திரைக்கு வந்ததை அடுத்து அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படம் டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெபி பட்டேல் , பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அருண் விஜய் மற்றும் அறிவழகன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள இந்த படம் ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு … Read more

மொழி பிரச்னையை தூண்டுகிறார் – சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்

நடிகர் சித்தார்த் சமூக வலைதள பக்கங்களில் தனக்கு தோன்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை துணிச்சலோடு பதிவிடுவார். அடிக்கடி இவரது சமூக வலைதள பதிவுகள் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது.  சித்தார்த் தனது பெற்றோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் இவர்களை ஹிந்தியில் பேச வற்புறுத்தியும், இதற்கு மறுத்ததால் கூட்டமே இல்லாத விமான நிலவியது சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்களை … Read more

‘விஜய்தான் நம்பர் 1 ஹீரோ என்று நான் சொன்னதற்கு இதுதான் காரணம்’ – தில் ராஜூ விளக்கம்!

நடிகர் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் 1 என்றுக் கூறி நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளநிலையில், … Read more

அஜித் 62 : விக்னேஷ் சிவன் கொடுத்த புதிய அப்டேட்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமையில் வேற மாறி மற்றும் அம்மா பாடலையும் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அஜித் நடிக்கும் 62வது படத்தை இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன். அதையடுத்து இந்த படம் … Read more

"தெரிந்தே பல சாதிய கொடுமைகள் நடக்கிறது; மக்களுக்கு விழிப்புணர்வு தேவை" – பா.ரஞ்சித்

புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை குறித்து பேசியிருக்கும் இயக்குநர் பா ரஞ்சித், தமிழ்நாட்டில் சமூக நீதி பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தான், சாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இசைப் பிரியர்களின் ஆரவாரத்துடன் மார்கழியில் மக்கள் இசை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் தொடங்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுவன்ஷங்கர் ராஜா, பேரறிவாளன், அற்புதம்மாள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நடுவில் செய்தியாளர்களை சந்தித்த பா. … Read more

வாஜ்பாயாக நடிப்பது என் வாழ்நாள் பாக்கியம்: பங்கஜ் திரிபாதி

இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பாரதிய ஜனதா கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். 3 முறை பாரத பிரதமராக இருந்து எதிர்கட்சியினராலும் போற்றப்பட்ட தலைவராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கை தற்போது 'மெயின் அடல் ஹூன்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கும் இப்படத்தின் கதையை உத்கர்ஷ் நைதானி எழுதியுள்ளார். இரட்டையர்களான சலீம்-சுலைமான் இசையமைக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் … Read more

நம்பர் 1 சர்ச்சைக்கிடையே அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் யார் நம்பர் 1 ஹீரோ என்ற சர்ச்சைக்கிடையே, அஜித்தின் ‘துணிவு’ படத்தை ஆந்திராவின் இரண்டு ஏரியாக்களில், விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட உள்ளார். ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. ஜிப்ரான் இசையமையத்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. மேலும், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு, … Read more

தமிழுக்கு வந்த உஸ்பெகிஸ்தான் வரவு

எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛ராங்கி'. அதிரடி ஆக் ஷன் கலந்த கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இதில் அந்நாட்டை சேர்ந்த ஆலிம் என்ற இளைஞனை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளார் சரவணன். சோஷியல் மீடியா மூலம் பழகும் பழக்கத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எதில் போய் முடிகிறது என்று பரபரப்பாக நகரும் முருகதாஸ் எழுதிய கதையை சரவணன் … Read more