விமானத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்!!

விமானத்தில் அத்துமீறியதால் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் படத்தில் நடித்திருந்த இவர் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அங்கு மிக முக்கிய நடிகராகவும் உள்ளார். பீஸ்ட் தோல்வியை தொடர்ந்து அளித்த பேட்டி ஒன்றில், தன்னை படத்தில் டம்மியாக காட்டியதாக குற்றம்சாட்டினார். இவருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில் ‘பாரத சர்க்கஸ்’ என்ற … Read more

Varisu: துணிவால் விஜய்க்கு பதட்டமா.?: பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்.!

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு முன்பாகவே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ’தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ‘வாரிசு’ படத்தின் ஷுட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் … Read more

புதிய புகைப்படத்தைப் பகிர்ந்து 'ஷாக்' கொடுத்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமா உலகில் திறமையான நடிகர்களில் ஒருவர் என குறுகிய காலத்தில் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் அவருக்கு நற்பெயரை அதிகமாக பெற்றுத் தரவில்லை. அதிலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடித்தார் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். அந்தப் படத்தில் 'டிஎஸ்பி' கதாபாத்திரத்திற்குப் பொருத்தம் இல்லாத விதத்தில் அவரது உடல் … Read more

Rajini: பாபா ரீரிலீஸ்..வெற்றியா ? தோல்வியா ? வெளியான தகவல் ..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிக்கு மேல் வெற்றிகளை பதிவு செய்து வந்த ரஜினி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிபெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது கட்டாய வெற்றியை பெரும் சூழலுக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். Rajini: ஜெயிலர் படத்தில் இவ்வளோ … Read more

நான் புரட்சி தளபதியல்ல : விஷால்

விஷால் நடித்துள்ள லத்தி படம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. நடிகர்கள் ரமணா, நந்தா தயாரித்துள்ள இந்த படத்தை வினோத்குமார் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சுனைனா படத்தின் நாயகி. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது: இந்த படத்தின் கதையை சொல்லி இயக்குனர் வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், … Read more

‘பணம் கேட்கும் யூ-ட்யூப் திரை விமர்சகர்களுக்கு தடை விதிக்கணும்’- மலையாள இயக்குநர் ஆவேசம்!

எதிர்மறை விமர்சனங்களை கொடுத்துவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு தயாரிப்பாளர்களை சில யூ-ட்யூப் விமர்சகர்கள் மிரட்டுவதாக பிரபல மலையாள இயக்குநரான ரோஷன் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘How Old Are You?’ படத்தை, தமிழில் ‘36 வயதினிலே’ என்றப் பெயரில் ரீமேக் செய்தவர் பிரபல மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப் படத்தின் மூலம் தான் ஜோதிகா தமிழ் திரையில் ரீ- என்ட்ரி கொடுத்தார். அண்மையில் துல்கர் சல்மானின் … Read more

மீனாட்சி பொண்ணுங்க தொடரிலிருந்து விலகிய மோக்சிதா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்சிதா, திடீரென விலகிவிட உடனடியாக சவுந்தர்யா ரெட்டி என்கிற மற்றொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார். சில நாட்களே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த அந்த கன்னடத்து பைங்கிளி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என பலரது மனதிலும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டியிலிருந்து தெரியவரும் தகவலின் படி, மோக்சிதா … Read more

‛லைசன்ஸ்' – நயன்தாரா சாயலுக்கு மாறிய ராஜலெட்சுமி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் சினிமாவிலும் பின்னணி பாடகர்களாக கலக்கி வருகின்றனர். இதில், செந்தில் கணேஷ் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து படம் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வியை சந்தித்தது. இதனைதொடர்ந்து அவரது மனைவி ராஜலெட்சுமியும் தற்போது சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்திற்கு ‛லைசன்ஸ்' என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், முதல்பார்வை … Read more

திருமணமான ஹன்சிகா வீட்டில் வந்திறங்கிய பேரிடி: டைவர்ஸூக்கு விண்ணப்பம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடிகை ஹன்சிகாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழா சினிமா வட்டாரத்தில் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஹன்சிகாவின் திருமண விழாவில் தெனிந்தியா மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு, நட்சத்திர தம்பதியை வாழ்த்தினர். இந்நிலையில், அவர்களது வீட்டில் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் டைவர்ஸ் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஹன்சிகா சகோதரர் விவாகரத்து ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது … Read more

மகேஷ் சுப்ரமணியத்துக்கு ஹிட் சீரியலில் வாய்ப்பு

வளர்ந்து வரும் சின்னத்திரை நடிகரான மகேஷ் சுப்ரமணியம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். முறைப்படி நடனம் பயின்றவர் என்பதால் பிரபல நடன நிகழ்ச்சியிலும் அசத்தலாக நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதன்பிறகு தான் இவரை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர் நடித்த சீரியல்களில் 'பகல் நிலவு' 'கடைக்குட்டி சிங்கம்', 'ராசாத்தி' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'முத்தழகு' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையோ சினிமாவோ ஒரு ஹீரோவுக்கான … Read more