தள்ளாடும் டிசம்பர் 9 ரிலீஸ் படங்கள்

2022ம் வருடத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாவது நடந்திருக்கிறது. எப்போதும் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் கூடுதலான படங்கள் வருவது வழக்கம். அந்த விதத்தில் இந்த மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் டிசம்பர் 9ம் தேதி, டப்பிங் படங்களுடன் சேர்த்து, “DR 56, எஸ்டேட், ஈவில், குருமூர்த்தி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஸ்ரீ ராஜ ராஜ மணிகண்டன், வரலாறு முக்கியம், விஜயானந்த்,” என 8 படங்களும் நேற்று டிசம்பர் 10ம் தேதி மறு … Read more

பாடல் காட்சிக்காக பிரான்ஸ் கிளம்பிய சிரஞ்சீவி – ஸ்ருதிஹாசன்

காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் வால்டர் வீரையா. இயக்குனர் பாபி இயக்கி வரும் இந்த படம் வரும் ஜனவரி 13ம் தேதி சங்கராந்தி பண்டிகை ரிலீசாக வெளியாகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கேத்தரின் தெரசா நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாஸ் வச்சிண்டு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த … Read more

பிக்பாஸ் டபுள் எவிக்சனில் சர்ச்சை! தொலைக்காட்சியை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராம், ஆயிஷா, ஜனனி, அசீம், கதிர், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையன்றே எலிமினேட் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராம் மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமின் எவிக்சனை கூட மக்கள் பெரிதாக … Read more

என்ன செய்வேன் தெரியுமா…? பாலியல் வன்கொடுமை குறித்து கீர்த்தி சுரேஷ்

பாலியல் துன்புறுத்தலும், அத்துமீறலும் அனைத்து திரையுலகிலும் என்றும் ஒலிக்கும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியே பகிரங்கமாக அறிவிப்பது மிகவும் குறைவானவர்களே. தென்னிந்தியாவில் மலையாள திரைப்பட உலகில் பாலியல் குற்றச்சாட்டு சமீப ஆண்டுகளில் பெரும் பூகம்பங்கள் வெடித்துள்ளது.  இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, நடிகை கீர்த்தி சுரேஷிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடன் பணிபுரியும் பலர் என்னுடன் பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிரங்கமாக விவாதித்துள்ளனர். ஆனால் அது … Read more

டிரென்டிங் போட்டியில் 'தீ தளபதி….,' மற்றும் 'சில்லா..சில்லா..'

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் போட்டியிட உள்ளன. அந்த வெளியீட்டுப் போட்டிக்கு முன்னதாகவே பாடல்கள் மூலம் இப்போது போட்டி ஆரம்பமாகியுள்ளது. 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவந்து 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. அதற்கடுத்து இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி..' பாடல் ஒரு வாரம் முன்னதாக வெளியாகி 20 … Read more

பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்… அப்செட்டில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது. ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாததும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் … Read more

இறவாக்காலம் குறித்து அஸ்வின் சரவணன் நம்பிக்கை

நயன்தாரா நடித்த மாயா என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேசமயம் இந்த படத்திற்கு முன்னதாக அவர் எஸ்ஜே சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த அந்த படம் சில காரணங்களால் எப்போது ரிலீசாகும் என்பது தெரியாமல் … Read more

மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்! அறிக்கையில் விளக்கம்

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். ஸ்டார் அந்தஸ்தில் இருந்த சரத்குமார் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்சீரீஸ், திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்சத்து குறைப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அவர் … Read more

பாலாவின் சம்பள விவகாரம் ; ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்த உன்னி முகுந்தன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ஷபீக்கிண்டே சந்தோஷம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை உன்னி முகுந்தனே தயாரித்து இருந்தார். இந்த படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழ் நடிகருமான பாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் உன்னி முகுந்தன் தனக்கு பேசியபடி சம்பளத்தொகை கொடுக்கவில்லை என்றும், தனக்கு மட்டும் அல்ல இன்னும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் பட்டுவாடா … Read more

ரேவதியின் சலாம் வெங்கியை பாராட்டிய சிரஞ்சீவி

தமிழ், மலையாள சினிமாக்களில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சீனியர் நடிகை ரேவதி சமீபகாலமாக இந்த இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.. காரணம் அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வந்தார். கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செஸ் விளையாட்டு வீரன் ஒருவனை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரேவதி. அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் இந்த … Read more