Ravindar Mahalakshmi: நல்ல சேதி சொன்ன ரவீந்தர், மகாலட்சுமி: குவியும் வாழ்த்துக்கள்.!

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்தது. சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்தார். இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரின் திடீர் திருமணம் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் திடீர் மாற்றம்?

தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வயதிலும் இளம் வயதில் இருந்த அதே சுறுசுறுப்போடும், துள்ளலோடும் கலக்கி வருகிறார்.  தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி நிரூபித்து வருகிறார், ரஜினியின் திரை பயணத்தில் தோல்வி படமாக அமைந்த ‘பாபா’ படம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது.  இந்த படம் குறிப்பாக 2கே கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது … Read more

Samantha: சமந்தாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்: அஜித் பட நடிகை பகீர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். நாகர்ஜுனாவுடனான பிரிவிற்கு பின்னர் படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா … Read more

ஆர்யாவின் பிறந்த நாளில் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சாயிஷா. அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, காப்பான், கஜினிகாந்த் என பல படங்களில் நடித்தார். இதில் காப்பான் படத்தில் நடித்தபோது ஆர்யாவும், சாயிஷாவும் காதலித்தனர். அதன்பிறகு 2019ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனபோதும் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று ஆர்யாவின் பிறந்தநாளை … Read more

தமிழக கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். ஒரு சில போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் பேட்டியில், தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்த நடராஜன், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  சேலம் மாவட்டத்தில் இருந்து … Read more

பராசக்தி, ப்ரியமுடன், சிவாஜி – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – ஜெயம்மதியம் 03:00 – காப்பான்மாலை 06:30 – புலிக்குத்தி … Read more

உணவகத்தில் வைக்கப்பட்ட அஜித்தின் மெழுகு சிலை! ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

சின்னமனூரில் உணவகம் ஒன்றில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. ரசிகர்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தேனி அருகே சின்னமனூரில் நடிகர் அஜித் குமாரின் ரசிகர் காளிதாஸ் என்பவர் புதிதாக உணவகம் ஒன்றை திறந்துள்ளார். அதன் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த உணவகத்தின் முன் பகுதியில் நடிகர் அஜித்தின் 8 அடி உயர மெழுகு சிலையை வைத்துள்ளார். இந்நிலையில். அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் மெழுகு சிலையை ஆச்சரியத்தோடு … Read more

ரஷ்ய மொழியில் வெளியாகும் விக்ரமின் கோப்ரா!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் கோப்ரா. விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. 100 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் 40 கோடி மட்டுமே வசூலித்தது. இந்தநிலையில் தற்போது கோப்ரா படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. காரணம் டிசம்பர் 15-ந்தேதி ரஷ்யாவில் … Read more

விஜய்யைத் தொடர்ந்து தனுசுடன் மோதும் சஞ்சய்தத்!

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவரது அண்ணனாக ஒரு நெகடிவ் ரோலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த படத்தின் … Read more

துணிவு வெளியாகும் போது ரசிகர்களுக்கு செம ஆஃபர்!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் தீவிர அஜித் ரசிகர். இவர் வீரம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அஜித்தின் மெழுகு சிலையை திறந்துள்ளார். கம்பம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே அமைந்துள்ள வீரம் உணவகத்தின் இரண்டாவது கிளையில் நடிகர் அஜித்தின் உருவ சிலையை திறந்து அஜித் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் இவர். தீவிர அஜித் … Read more