ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்க்கு 10 ஆண்டுகள் தடை

ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்-க்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை அறைந்த சம்பவத்தினை தொடர்ந்து  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்யும் குழு, வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து விவாதித்தது. இதன்பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் வில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களைப் பாதுகாப்பதையும், அகாடமியின் … Read more

த்ரிஷ்யம் நடிகர் மீது மீ டூ புகார்

பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் மலையாளத்தில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, சூடானி பிரம் நைஜீரியா, லூசிபர், ஒரு அடார் லவ் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர படங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குனராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். . இவர் சில வருடங்களுக்கு முன் … Read more

மெஹந்தி சர்க்கஸ் மாப்பிள்ளை தான் பீஸ்ட் முகமூடி வில்லன்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்-13ம் தேதி வெளியாக உள்ளது.. ஆனாலும் இப்போது வரை இந்தப்படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடித்துள்ளார் என்கிற விஷயத்தை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். முதலில் செல்வராகவன் வில்லன் என்றார்கள்.. ஆனால் அவரோ வில்லன்கள் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியாக தான் நடித்துள்ளார். இந்தப்படத்தின் டிரைலரில் முகமூடி அணிந்த வில்லன் நபரை பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி … Read more

பிரித்விராஜ் படத்தில் நிஜமாகவே படமாக்கப்பட்ட குண்டு வெடிப்பு காட்சி

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஜன கண மன திரைப்படம் வரும் ஏப்-28ஆம் தேதி வெளியாக உள்ளது. குயீன் படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி, டிரைலரின் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு கால் சற்றே ஊனமான நிலையில் இருக்கும் பிரித்விராஜ், அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிப்பது போலவும் அதை கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே … Read more

முன்பதிவில் 'ஆர்ஆர்ஆர்'ஐ முந்தும் 'கேஜிஎப் 2'

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டப் படங்கள் இந்தித் திரையுலகத்தை மிரள வைக்கின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் ஹிந்தியில் 200 கோடியையும் உலக அளவில் 1000 கோடி வசூலையும் கடந்துள்ளது. அதற்கடுத்து அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ள 'கேஜிஎப் சாப்டர் 2' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான முன்பதிவு இந்திய மல்டிபிளக்ஸ் … Read more

ரசிகர்களை தவிக்கவிடாமல் அரவணைத்த யஷ்

கேஜிஎப் படம் மூலம் தமிழகத்திலும் ரசிகர்களைப் பெற்றவர் கன்னட நடிகரான யஷ். அவரது நடிப்பில் 'கேஜிஎப் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இது பற்றி கேள்விப்பட்ட யஷ் ரசிகர்கள் நேற்று அந்த ஓட்டல் இருக்கும் தெரு முன் திரண்டு நின்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்களாம். இது … Read more

தாறுமாறாக விற்கப்படும் 'பீஸ்ட்' சிறப்புக் காட்சி டிக்கெட்டுகள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் படம் வெளியாகும் தினமான ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 4 மணி காட்சி, காலை 7 மணி காட்சிகள் பல தியேட்டர்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்கான டிக்கெட் கட்டணங்கள் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிக பட்சமாக டிக்கெட் விலை 190 … Read more

கொடைக்கானல் மலை உச்சியில் நடனமாடிய வரலட்சுமி

சமந்தா கதாநாயகியாக நடித்து வரும் படம் யசோதா. இந்தப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயன் ஆகியோர் இயக்கி வரும் இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன், சம்பத் ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க மணிசர்மா இசையமைக்கிறார், இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த யசோதா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மலை உச்சியில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து … Read more

ஒர்க்கவுட்டில் தீவிரமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி

18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த தனுஷும், ஐஸ்வர்யா ரஜினியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார்கள். அதையடுத்து வழக்கம்போல் தனுஷ் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். அடுத்தபடியாக ஹிந்தி படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதோடு தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரை சந்திக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது ஒர்க்கவுட் மற்றும் யோகா பயிற்சிகளில் தீவிரமாக … Read more

ஜேம்ஸ் கேமரூனுக்கான இந்தியாவின் பதில் தான் ராஜமவுலி : அனில் கபூர் புகழாரம்

இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை கவனித்து பார்த்தால் ஓவொரு படத்திலும் அவர் எந்த அளவுக்கு இந்திய சினிமாவை உலக அளவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என்பது நன்றாகவே தெரியும்.. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும் கூட அவரது முந்தைய படங்களுக்கு சளைத்தது இல்லை என்றும் சொல்லும் விதமாக பிரமாண்டம் காட்டி இயக்கியிருந்தார். ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களும் கூட ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் … Read more