‛தொடாதே' படம் மூலம் ஹீரோவானார் 'காதல்' சுகுமார்
காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் சுகுமார். அதன்பின் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். தற்போது ‛தொடாதே' என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயக்குமார் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ். நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் … Read more