Agaram: "சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம்…" – கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது. Agaram விதை 15-ம் ஆண்டு விழா அந்தக் காணொளியைத் தொடர்ந்து, … Read more

ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்கு பயன்படுத்த மாட்டேன் – அஜித் திடீர் அறிக்கை

Actor Ajith Kumar: ரசிகர்களின் அன்பை தன் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித்குமார் அவரது 33 வருட திரைப்பட பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.

Vetrimaaran: "அசுரனில் நான் வசனம் எழுதியது பெரிய விஷயமல்ல!" – அகரம் விதைத் திட்டம்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாம் யார் என்பதை இதுதான் தீர்மானிக்கிறது… அகரம் மாணவர்களுடன்.. நிகழ்ச்சியில் உரையாடிய வெற்றிமாறன், “இந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்கும் எனக்கே இவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்போது, அகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதை வழிநடத்தும் சூர்யா மற்றும் அவரது குழுவினருக்கு எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் … Read more

தேசிய விருது வென்றதும் புதிய படத்தில் கமிட் ஆன எம்எஸ் பாஸ்கர்!

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER). படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

Suriya: "எனக்கு விருப்பமான Mrs.Chatterjee படத்திற்கு" – தேசிய விருது வென்றவர்களை வாழ்த்திய சூர்யா!

71வது தேசிய விருதுகளில் விருதுபெற்ற கலைஞர்களை வாழ்த்தியுள்ளார் நடிகர் சூர்யா. தமிழ்நாட்டிலிருந்து விருது பெற்றவர்களைக் குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, “71வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணைநடிகர் பிரிவுகளில் கௌரவிக்கப்பட்டுள்ள பார்கிங் படக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்த்துகள் எம்.எஸ்.பாஸ்கர், ராம்குமார் (இயக்குநர்), கே.எஸ்.சீனிஷ் (தயாரிப்பாளர்) மற்றும் சுதன் சுந்தரம் (தயாரிப்பாளர்). அன்புள்ள ஜி.வி.பிரகாஷ் வாத்தி படத்துக்காக சிறந்த பாடல்களுக்கான விருதை வென்றதற்கு வாழ்த்துகள்!” எனக் … Read more

"மதன் பாப் ஏ.ஆர் ரஹ்மானின் குரு.." – அனுபவம் பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71). நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார். மதன் பாப் இறப்புக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இல்லத்துக்கு வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். மதன் பாப்-க்கு புற்றுநோய் “ஒருவருஷத்துக்கு முன்னாடியே அவருடைய … Read more

Parking: "உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா?" – கமல் ஹாசன் சந்திப்பு குறித்து ஹரிஷ் கல்யாண்!

71வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள பார்கிங் திரைப்படக் குழுவினரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். சிறந்த படம் மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதை விருதையும் அந்தப் படம் வென்றது. அதில் நடித்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். பார்கிங் குழுவினருடன் கமல் ஹாசன் முன்னதாக சமூக ஊடகங்கள் வழியாக தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன், இயக்குநர் ராம்குமார், ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் … Read more

புகழ் நடித்துள்ள Mr Zoo Keeper படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சுரேஷ் இயக்கத்தில் ‘குக்கு வித் கோமாளி’ புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஸ்டர் ஜூகீப்பர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

மதன் பாப்: "நம் சிந்தை மணக்கச் சிரித்தவர்; மனதை எல்லாம் பூ போலப் பறித்தவர்" – டி.ராஜேந்தர் இரங்கல்

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71). நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார். மதன் பாப் மரணத்துக்குத் திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைக்கலைஞர் டி.ராஜேந்தர், “அவர் சிரிப்போ டாப்போ டாப், மக்கள் மனங்களை மகிழ வைப்பதே என் ஜாப் என்று வாழ்ந்தவர்தான் மதன் பாப். நம் … Read more

Coolie Trailer: "தலைவன் இறங்கி சரிதம் எழுதவே!" – வெளியான 'கூலி' திரைப்பட டிரெய்லர்!

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். Coolie trailer அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. … Read more