Indian 2: "இந்தப் பாகத்தில் கமல்ஹாசன் குறைந்த நேரம் மட்டுமே தோன்றுவாரா?" – ஷங்கர் விளக்கம்
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `இந்தியன் 2′. 1996-ம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியில் ‘ஹிந்துஸ்தானி 2’ என்றும், தெலுங்கில் ‘பாரதியிடு 2’ என்றும் வெளியாகவிருக்கிறது. கமல்ஹாசன் இந்த வாரம் … Read more