suriya: "ஆருயிர் இளவல் சூர்யா அவர்களுக்கு…." – நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து
இன்று ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆர்.ஜே.பி. இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தது படக்குழு. ஒருபக்கம் வழக்கறிஞர், மறுபக்கம் கிராமத்து கருப்பு என அதிரடி ஆக்ஷன் திரில்லராக ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக வந்திருக்கிறது டீசர். `கருப்பு’ படத்தில் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாஸ்விகா, ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். … Read more