மேட்-இன்-சென்னை ஐபோன்14 : தீபாவளிக்கு வெளியாகுமா?

ஆப்பிள் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபோன்14 விரைவில் இந்திய தயாரிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் சென்னையிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த புதிய ரக கைப்பேசியை ஆப்பிள் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைக்கிறது. வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்பே சந்தையில் வரவுள்ள தனது புதிய வெளியீடுகள் குறித்த தகவல்களை அந்த … Read more

சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “தமிழக முதல்வரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை … Read more

புதிய கொலை வழக்கில் எடப்பாடி?; பகீர் தகவலால் பரபரப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் 100வது நாளான மே 22ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, திடீரென அங்கு கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி 2 பெண் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் … Read more

போதையில் குத்தாட்டம் பின்லாந்து பிரதமருக்கு ஊக்கமருந்து சோதனை

பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். 2019 ம் ஆண்டு தனது 34 வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சன்னா மாரின் அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றார், மேலும் பின்லாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. பிரதமர் என்ற பந்தா இல்லாமல் தொடை தெரிய கால் சட்டை அணிந்து செல்வது அவ்வப்போது கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்வது என்று … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி: கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிக்கள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

“நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை… என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா" – மணிகண்ட பூபதி பேட்டி

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றும் வலதுசாரி நிறுவனத்தில் இணை நிறுவனராக பணிபுரிந்தவர் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரது நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பின்புலத்தை ஆராய ஆரம்பித்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இந்த விமர்சனங்கள் குறித்து மணிகண்ட பூபதியை தொடர்புகொண்டு பேசினோம். விகடனுக்காக முதன்முறையாக மனம் திறந்தார். மணிகண்ட பூபதி “முதலில் என்மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் … Read more

ஜம்மு காஷ்மீரில் சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைய வாய்ப்பு – ஹிர்தேஷ் குமார்

ஜம்மு-காஷ்மீரில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தம் வரும் நவம்பர் 25-ம் தேதி முடிவடையும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதோடு, வரும் செப்டம்பர் 15 முதல் … Read more

‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது

பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்து கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த படம் லால் சிங் தத்தா . இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதால் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அமீர்கான். இந்தநிலையில், இப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வந்துள்ளார்கள். இதுகுறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பெங்களூரில் உள்ள ஓரியண்ட் மாலில் இருந்து லால் சிங் தத்தா … Read more

டியூஷன் சென்று திரும்பிய சிறுமிமீது துப்பாக்கிச் சூடு! – பட்டபகலில் நடந்த பயங்கரம்

பீகார் மாநிலம், பாட்னாவில் 16 வயது சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி எப்போதும் அதிகாலை டியூசன் சென்று காலை 8 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை டியூசன் முடிந்து பீர் நகர் காவல் நிலையத்தின் சிபாரா பகுதி வழியாக சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சுவரின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்தச் சிறுமி கடந்து சென்றபிறகு அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். துப்பாக்கிக் குண்டு அந்தச் … Read more

ஆர்டர்லி முறை ஒழிப்பு: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்ற காவலர் சென்னையில் வேறு இடத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், காவல்துறையில் நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த … Read more