Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

இன்று (11-06-2025) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று … Read more

ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் 5வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு.

வாஷிங்டன்: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4  திட்டத்தின்படி, இந்திய விண்வெளி வீரர் உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு  அனுப்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவது இது 5வது முறையாகும். ஏற்கனவே ஜுன் 10ந்தேதி  ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக,  அந்த திட்டம் ஜூன் 11ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக நாசா அறிவித்தது. அதன்படி, நேற்று மாலை இந்த திட்டத்தின்படி, … Read more

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

திருவனந்தபுரம், கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந் திருக்கிறார்கள். அவர்களுடன் விபசாரகும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட … Read more

9 ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தம்பிரான் கும்பிடு திருவிழா! | Photo Album

சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை விடும் திருவிழா சேசை … Read more

இன்று பெருந்துறை அருகே முதல்வர் தொடங்கி வைக்கும் வேளாண் கண்காட்சி

பெருந்துறை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி … Read more

மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்; கோவா டாக்டர் அதிரடி

பனாஜி, கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்ற மந்திரி விஷ்வஜித் ரானா பணியில் இருந்த டாக்டர் ருத்ரேசை கடுமையாக சாடினார். நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் … Read more

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான … Read more

ராஜஸ்தான்: பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

பரத்பூர், ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படும் 11 பேர் கொண்ட குழு, ஒரு நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட டோங்கிற்கு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது தீடீரன நீரில் மூழ்கத் தொடங்கியபோது மற்ற … Read more

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியிருந்தனர். இதற்கிடையில், டோங்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வான் கூறுகையில், 8 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர் ஜெய்ப்பூரிலிருந்து ஒரு பயணமாக வந்ததாக சங்வான் தெரிவித்தார். “பனாஸ் நதியில் மூழ்கி 8 சுற்றுலாப் பயணிகள் இறந்த … Read more

ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சந்திப்பு

மைசூரு, ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இதனால் 11 பேர் உயிரிழந்தனர்.இ்ந்த சம்பவத்துக்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்பதும், அவசரம், அவசரமாக விழாவை ஏற்பாடு செய்தது தான் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் … Read more